நீங்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் செய்தி படிக்கப்பட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

இதன் மூலம் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை அந்த நபர் பெற்றுக் கொள்கிறார் அதை வாசிக்கவும் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By: February 27, 2020, 3:38:26 PM

Whatsapp tips tricks : வாட்ஸ் அப் பில் நீல நிற டிக் (tick) ஆப் (off) செய்யப்பட்டு இருந்தாலும் உங்கள் குறுஞ்செய்தியை பெற்றுக் கொண்ட பயனர் வாசித்தாரா இல்லையா என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது.

வாட்ஸ் அப் தனது நீல நிற டிக் அம்சத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது. ஒரு குருஞ்செய்தியை அனுப்பியவர், அதை பெற்று கொண்டவர் அந்த செய்தியை வாசித்தாரா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள இந்த வசதி அனுமதித்தது. இந்த அம்சத்தை வெளியிட்ட பிறகு, ஒரு ’டிக்’ என்பது செய்தி அனுப்பப்பட்டது என்பதையும், இரண்டு சாம்பல் நிற ’டிக்’ கள் என்பது செய்தி பெறப்பட்டது ஆனால் அது திறந்து பார்க்கப்படவில்லை என்பதையும், இரண்டு நீல நிற டிக்கள் என்பது செய்தியை பெறுனர் படித்துவிட்டார் என்பதையும் உணர்த்தியது.

மேலும் படிக்க : சந்திரனை இவ்வளவு துல்லியமாக நீங்கள் பார்த்ததுண்டா? நாசாவின் 4K வீடியோ வெளியீடு!

ஆனால் எல்லா பயனாளர்களும் தங்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை படித்தோமா இல்லையா என்பதை, அனுப்பியவர் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. எனவே சில பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் settings ல் உள்ள read receipt அம்சத்தை டிஸ் ஏபிள் செய்துவிடுகின்றனர். எனினும் read receipt அம்சத்தை அனைத்து வைத்துள்ள பயனர்களும் நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்தார்களா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம்.

read receipt அம்சத்தை டிஸ் ஏபிள் செய்து வைத்துள்ளதாக நீங்கள் கருதும் பயனாளரின் வாட்ஸ் ஆப் chat ஐ ஒப்பன் செய்துக் கொள்ளுங்கள்.

அந்த பயனாளருக்கு ஒரு voice note அனுப்புங்கள்.

அந்த பயனர் நீங்கள் அனுப்பிய voice note ஐ கேட்கிறார் என்றால் microphone icon நீல நிறத்தில் மாறும். இதன் மூலம் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை அந்த நபர் பெற்றுக் கொள்கிறார் அதை வாசிக்கவும் செய்கிறார் ஆனால் பதில் அனுப்பவில்லை என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் செய்தியை அந்த பயனர் படிக்கிறாரா இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள இது ஒரு புதிய முறை ஒன்றும் இல்லை. இது முதல் முறையாக கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp tips tricks how to know whether your message is read or not

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X