Advertisment

வாட்ஸ்அப்பில் உங்களை யாராவது பிளாக் செய்துவிட்டார்களா? இதோ நொடியில் அறியலாம்

whatsapp tips : ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு அழைப்பு செய்து பாருங்கள் அது செல்லவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp tips, whatsapp tricks, blocked on whatsapp,whatsapp features, how to block on whatsapp, how to find who blocked on whatsapp, am i blocked on whatsapp, , whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil

whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil, வாட்ஸ் அப், வாட்ஸ்அப் டிரிக்ஸ், வாட்ஸ் அப் அப்டேட்கள்

WhatsApp News In Tamil: அதிகமான மக்கள் இணையத்திற்கு மாறுவதால் இணைய அச்சுறுத்தல் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. வாட்ஸ் ஆப் கணக்குகளில் ஹேக்கர்கள் நுழைந்து தகவல்கள் மற்றும் பணத்தை திருடும் சம்பவங்கள் பற்றியும் நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட PM cares நிவாரண நிதி தொடர்பாகவும் வாட்ஸ் ஆப்பில் மோசடிகாரர்கள் போலியான செய்திகளை அனுப்பி பயனர்களின் பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆன்லைனில் வாட்ஸ் ஆப் அல்லது வேறு ஏதாவது சமூக ஊடகம் மூலமாக உங்களை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களை தவிர்ப்பதற்கான சரியான வழி அவர்களை பிளாக் (‘block’) செய்வது தான். இதனால் அவர்கள் மீண்டும் வந்து உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பெரும்பாலான சமூக ஊடகங்கள் பிளாக் விருப்ப தேர்வுடன் வருகிறது, இதன் மூலம் பயனர்கள் மக்களை தடுப்புப்பட்டியலில் வைக்க உதவும். உங்களை ஒருவர் சமூக ஊடகங்களில் பிளாக் செய்து விட்டால் நீங்கள் அவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அல்லது குறுஞ்செய்தி அனுப்ப அல்லது அழைப்பு செய்ய இயலாது. ஆனால் வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்து வைத்திருக்கிறார் என்பதை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்.

வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்து வைத்துள்ளாரா என்பதை கண்டுபிடிக்க இங்கே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

சுயவிவரப் படம் (profile picture) இல்லை

வாட்ஸ் ஆப்பில் யாராவது உங்களை பிளாக் செய்தால் சுயவிவரப் படம் திடீரென மறைந்துப் போகும். இதற்கான ஒரு காரணம் அவர் உங்களை பிளாக் செய்திருக்கலாம் அல்லது அவர் தனது சுயவிவரப் படத்தை நீக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

Status அல்லது இதர விவரங்கள் இல்லை

வாட்ஸ் ஆப்பில் ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டால் அவருடைய சுயவிவரப்படத்துடன், கடைசியாக பார்த்தது (last seen), status போன்ற இதர விவரங்களையும் உங்களால் பார்க்க முடியாது. இவற்றை பார்க்க முடியாததற்கு வேறு ஒரு காரணம் Settingsல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள். அவர் Privacy Settings ஐ reset செய்து “Only me” என்ற விருப்ப தேர்வை செய்திருக்கலாம்.

செய்தி சென்று சேரவில்லை (Message not delivered)

உங்களை வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பிளாக் செய்துவிட்டால் உங்களால் அவருக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதை கண்டுபிடிக்க நீங்கள் சந்தேகப்படும் நபருக்கு ஒரு செய்தியை அனுப்பி பாருங்கள். அந்த செய்தியில் ஒரே ஒரு grey tick மட்டும் இருந்தால் அவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்று அர்த்தம்.

அழைப்பு செல்லவில்லை (Call not going through)

ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு அழைப்பு செய்து பாருங்கள் அது செல்லவில்லை என்றால் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

வாட்ஸ் ஆப்பில் ஒருவரை எவ்வாறு பிளாக் செய்வது.

– WhatsApp app ஐ திறக்கவும்

– நீங்கள் பிளாக் செய்ய வேண்டும் என்று நினைக்கும் contact ன் chat ஐ திறக்கவும்.

–account ஐ பார்க்க சொடுக்கவும்.

–Scroll down செய்து block contact விருப்ப தேர்வை சொடுக்கவும்.

அதே போல் ஒருவரை நீங்கள் வாட்ஸ் ஆப்பில் unblock ம் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment