உங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்

Whatsapp to add end to end encrypted backups option அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து இறுதி முதல் இறுதி குறியாக்கம்,பாதுகாக்கிறது.

Whatsapp to add end to end encrypted backups option Tamil News
Whatsapp to add end to end encrypted backups option Tamil News

Whatsapp to add end to end encrypted backups option Tamil News : வாட்ஸ்அப் விரைவில் ‘எண்ட்-டு-எண்ட் மறைகுறியாக்கப்பட்ட பேக்கப்’ விருப்பத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்பத்தை நீங்கள் இயக்கினால் வாட்ஸ்அப் உட்பட யாரும் உங்கள் தனிப்பட்ட சாட்களை அணுக முடியாது என்பதை WaBetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்கள் காட்டுகின்றன. மூன்றாம் தரப்பு பயன்பாட்டிற்கு சாட்களை பேக்கப் எடுப்பதில் பலர் அக்கறை கொண்டிருப்பதால், இது ஒரு சிறந்த ஆப்ஷனாகத் தெரிகிறது. மேலும், உங்கள் எல்லா சாட்களையும் கூகுள் ட்ரைவில் பேக்கப் எடுக்க வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்கிறது.

சாட் பேக்கப் பிரிவில், “Encrypt your Backup” விருப்பத்தை வாட்ஸ்அப் சேர்க்கும் என்று ஸ்கிரீன் ஷாட்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சத்தை வாட்ஸ்அப்பின் 2.21.10.2 ஆண்ட்ராய்டு பதிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. சாட் பேக்கப்புகளுக்கான குறியாக்க அம்சத்தை இயக்க, நீங்கள் கடவுச்சொல்லை அமைக்க வேண்டும்.

எந்தவொரு சாதனத்திலும் வாட்ஸ்அப்பை மீட்டமைக்கும்போது, அதை மறைகுறியாக்க பதிவுசெய்த கடவுக்குறியீட்டை டைப் செய்யும்படி கேட்கப்படுவீர்கள். அதன் உள்ளடக்கத்தை யாரும் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து இறுதி முதல் இறுதி குறியாக்கம்,பாதுகாக்கிறது.

சாட்களை பேக்கப் செய்யக் குறியாக்க அம்சம் இயக்கப்பட்டால், கடவுச்சொல்லை மாற்ற அல்லது குறியாக்கத்தை முடக்குவதற்கான ஒரு விருப்பத்தையும் வாட்ஸ்அப் வழங்கும். “கடவுச்சொல் தனிப்பட்டது, அது வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கில் பகிரப்படாது” என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுச்சொல்லை இழந்தால், மறைகுறியாக்கப்பட்ட இறுதி முதல் இறுதி பேக்கப்பை மீட்டெடுக்க வாட்ஸ்அப் உங்களுக்கு உதவ முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று WaBetaInfo அறிக்கை கூறுகிறது. “கடவுச்சொல்லை இழக்கும்போது அல்லது பேக்கப்பை மீட்டெடுக்க விரும்பும்போது ஓர் recovery key-யை உருவாக்க வாட்ஸ்அப் வாய்ப்பளிக்கும்” என்று இந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் எந்த பிழையும் வெளியிடப்படாமல் தடுக்க பேக்கப்புக்கான குறியாக்க அம்சம் இன்னும் உருவாக்கத்தில்தான் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp to add end to end encrypted backups option tamil news

Next Story
Aadhaar Update Alert: உங்க ஆதார் கார்டை இப்படி டவுன்லோடு செய்து பாருங்க…!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com