மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக பயனர் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பேம் பிளாக்கர் என்ற வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை தானாகவே ப்ளாக் செய்யப்படுகிறது.
இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.
எப்படி எனெபிள் செய்வது?
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பீட்டா வெர்ஷன் (2.24.17.24)ல் வழங்கப்பட்டு வருகிறது. இதை செய்ய
- வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பக்கம் சென்று ப்ரைவசி ஆப்ஷன் கொடுக்கவும்.
2. Advanced என்பதை கொடுத்த பின் Protect IP address in calls என்ற ஆப்ஷன் இருக்கும்.
3. அதை கிளிக் செய்தால் தெரியாத நம்பர்களில் இருந்து மெசேஜ்களை ப்ளாக் செய்வதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“