Advertisment

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இனி அப்படியே இன்ஸ்டாவிலும் பகிரலாம்: எப்படி செய்வது?

பேஸ்புக்கை தொடர்ந்து இனி இன்ஸ்டாகிராமிலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பகிரலாம். எப்படி செய்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
WhatsApp users can now use secret code to protect sensitive chats tamil news

சமூக ஊடக நிறுவனமான மெட்டா அதன் மற்ற ஊடக தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்-ஐ ஒருங்கிணைத்து வருகிறது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களை தனக்கு சொந்தமாக கொண்டுள்ளது.  

Advertisment

WABetaInfo-ன் தகவல் படி, வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை இனி அப்படியே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீயாக பதிவிடும் படி புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதாக  இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிரும் படியான அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது  இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்கிறது. 

இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.23.25.20-ல் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த அம்சம் ஆப்ஷனல் தான் என்றும் விருப்பபட்டால் செட்டிங்ஸ் மெனுவில் ஆப்ஷன் மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீயாக இந்த புதிய அம்சம் மூலம் போஸ்ட் செய்ய முடியும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Instagram whatspp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment