WhatsApp update: இனி ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி ரியாக்ஷன் - அசத்தல் அப்டேட்
ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி வாயிலாக பதில் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதைக் குறித்து மேலும் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சமூக வலைதளத்தில் ஸ்டோரி அல்லது ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் விரைவாக பதிலளிக்க முடியும். இந்த வசதி தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது. நீங்கள் பார்க்கும் ஸ்டேட்டஸூக்கு டைப் செய்வதற்கு பதிலாக உடனே லவ், கோபம், சோகம் போன்ற ரியாக்ஷன்களை பதிலாக அனுப்பிட முடியும்.
Advertisment
உலகளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலியில் இத்தகைய வசதி இல்லாதது பயனர்களிடம் குறையாகவே இருந்து வந்தது. தற்போது, அதனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது.
WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் வசதி சோதனையில் இருப்பதாகவும், விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Quick Reactions’ வசதி மூலம் வாட்ஸ்அப்பில் நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு எமோஜி அனுப்பலாம். அதில், மடிந்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர் உட்பட சில ஸ்மைலிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் இந்த எமோஜிகள் தான் இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளதா அல்லது பயனர்கள் தங்களது விருப்பத்தின் பெயரில் செலக்ட் செய்யலாமா என்பது தெரியவில்லை.
கிடைத்த தகவலின்படி, ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்திட 8 எமோஜிகள் ஆப்ஷனாக வழங்கப்படும். இது வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் பீட்டா வெர்ஷனின் ஸ்கீரின்ஷாட் ஆகும். பெரும்பாலும், இதே எமோஜிகள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி வசதி, குரூப் அட்மினுக்கு கூடுதல் வசதி, 2ஜிபி ஃபைல் ஷேரிங் போன்ற வசதிகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil