மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 'ஃபேவரெட்ஸ்' ( Favourites ) என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சம் ஒரு ஷேட் ஃபில்டர் அம்சமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தற்போது சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இது regular contacts-ல் இருந்து பிரித்து பார்க்க உதவும். இது பின் ஷேட் போன்று இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அதில் 3 ஷேட் வரை மட்டுமே பின் செய்ய முடியும். இப்போது புதிதாக வரும் ஃபேவரெட்ஸ் அம்சம் தனி ஆப்ஷனாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த contacts save செய்து கொள்ளலாம்.
இந்த அம்சம் All, Unread and Groups அம்சத்துடன் டாப் பக்கத்தில்இடம் பெற உள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“