மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பயனர் தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று போன் நம்பர் தவிர்த்து யூசர் நேம் பயன்படுத்தும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Search bar அம்சத்தில் யூசர் நேம் பயன்படுத்தி தேடும் வகையில் அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது.
WABetaInfo தகவல் படி, இந்த அம்சம் பயன்படுத்தி பயனர் தங்களுக்கு என யூசர் நேம் கிரியேட் செய்யலாம். இது பயனர் தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. இது பயன்படுத்தும் போது போன் நம்பர் தேவையில்லை. உங்களின் போன் நம்பர் மற்றவர்களுக்குத் தெரியாது. எனினும் இந்த அம்சம் கட்டாயம் இல்லை என்றும் வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“