மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சில பழைய மாடல் போன்களில் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயல்படாது எனக் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த நிறுவனம் முடிவு செய்யதுள்ளது.
அதாவது, தற்போது வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு போன்களில் ஓ.எஸ் 4.எஸ்-லும் (OS 4.x) ஆப்பிள் போன்கிளில் ஐ.ஓ.எஸ்12 (iOS12) வெர்ஷனிலும் செயல்படுகிறது.
இந்நிலையில், ஆண்ட்ராய்டு 4.x (Android 4.x) மற்றும் அதற்கு கீழான வெர்ஷன் போன்களில் செயல்படும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. அக்டோபர் 24-ம் தேதி முதல் இந்த வெர்ஷன் போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Android Lollipop அல்லது அதற்குப் பிறகு உள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வேலை செய்யும்.
இருப்பினும், JioPhone மற்றும் JioPhone 2-ல் வாட்ஸ்அப் தொடர்ந்து செயல்படும். ஏனெனில் அவை KaiOS மூலம் இயக்கப்படுகின்றன. எனினும் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் தொடர்பான எஸ்.எம்.எஸ் சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறுப்பட்டுள்ளது.
எந்தெந்த போன்களில் செயல்படாது?
ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கும் குறைவான வேகத்தில் இயங்கும் சில பழைய மாடல் போன்களில் கேலக்ஸி எஸ்2, எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ, மோட்டோரோலா டிராய்ட் ரேசர், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, சாம்சங் கேலக்ஸி டேப் 10.1 மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 2எக்ஸ் ஆகியவைகளில் செயல்படாது. இவைகள் 10 ஆண்டுகளுக்கு முந்தைய மாடல் போன்கள் என்பதால் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை பாதிக்கும் என்பது சாத்தியமில்லை.
உங்கள் போன் என்ன வெர்ஷன்?
உங்கள் போன் என்ன வெர்ஷன் என்பதை தெரிந்து கொள்ள போன் செட்டிங்க்ஸ் சென்று ‘About phone’ கிளிக் செய்து ‘Software information’ செக்ஷன் செல்லவும். இங்கு உங்கள் போன் வெர்ஷன் பற்றி அறியலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“