மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் போல வாட்ஸ்அப் செயலியும்
விளம்பர ஆதரவு அம்சத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிய வாய்ஸ் மெசேஜ் மற்றும் ஸ்டிக்கர் அம்சங்களையும் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் அதிகரிப்பு உத்தி மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் நிறுவனம் இவ்வாறு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நேர்காணலில், வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் கேத்கார்ட், ஸ்டேட்டஸ் மற்றும் சேனல் அம்சத்தில் விளம்பரங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினார். இருப்பினும் வாட்ஸ்அப் அவை ஷேட் பக்கத்தில் இடம்பெறாது என வலியுறுத்தினார்.
எனினும் நிறுவனம் இதை எப்போது அறிமுகப்படுத்தும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் இதை அறிமுகப்படுத்தினால் கலவையான விமர்சனங்களைப் பெறும். பயனர்கள் விளம்பரங்களால் சலிப்படையலாம். வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைக்கவும் நேரிடும். வாட்ஸ்அப்பின் பிராண்ட் உணர்வை எதிர்மறையாக பாதிக்கலாம். எனினும் நிறுவனம் தற்போது எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
முன்னதாக, வாட்ஸ்அப் 2019-ல் ஸ்டேட்டஸ் அம்சத்தில் விளம்பரங்களை கொண்டு வர பீட்டா சோதனை செய்தது. ஆனால் அவை பயனர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“