மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 'Favorite Contact' எனப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விரும்பமான நபர்கள் அல்லது தினசரி அழைப்பு மேற்கொள்ளும் நபர்களை ஃபேவரைட் செய்து வைத்து one tap செய்து அவர்களை அழைக்கலாம்.
இந்த அம்சம் வாட்ஸ்அப் காலிங் ஆப்ஷன் பக்கத்தில் மேலே கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஃபேவரைட் Contact செய்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். இது one-tap calling வசதியாக இருக்கும். தற்போது இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“