scorecardresearch

ஆப்பிள் வாட்ஸ்அப்-ல் உள்ள வசதிகள் இனி ஆண்ட்ராய்டில்: புது மாற்றங்கள் என்ன?

ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப்-ல் மெசேஜ் மெனுவில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp
WhatsApp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர். நிறுவனமும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐ.ஓ.எஸ் (ஆப்பிள்)
வாட்ஸ்அப்-ல் உள்ள வசதிகள் போல் ஆண்ட்ராய்டிலும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் மெசேஜ் மெனுவில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐ.ஓ.எஸ்ஸில் உள்ள கண்டெக்ஸ்ட் மெனு போல் மாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. மெசேஜ் செலக்ட் செய்யும் போது. 5 ஆப்ஷன்கள் வரும்படி மாற்றுவதாக கூறியுள்ளது. டெலிட், பார்வேர்டு, ரிப்ளை, கீப், இன்போ என மாற்ற செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப்பில் 6 ஆப்ஷகள் உள்ளன. டெலிட், பார்வேர்டு, ரிப்ளை, ஸ்டார், இன்போ மற்றும் காப்பி என ஆப்ஷன்கள் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp to introduce revamped message menu on android inspired by ios

Best of Express