இனி ஆண்ட்ராய்டிலிருந்து iOS சாதனங்களுக்கு சாட்களை மாற்றுவது எளிது!

Whatsapp to make it easier for you to transfer chats between android and IOS வாட்ஸ்அப் பயனர்கள் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறினால் விரைவில் சாட்களை மாற்ற முடியும்.

Whatsapp to make it easier for you to transfer chats between android and ios Tamil
Whatsapp to make it easier for you to transfer chats between android and ios Tamil

Whatsapp to make it easier for you to transfer chats between android and IOS Tamil : ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கு இடையில் சாட்களை பரிமாற்றுவதை வாட்ஸ்அப் விரைவில் எளிதாக்கும். இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம். செய்தியிடல் பயன்பாடு உங்கள் தரவை மூன்றாம் தரப்பு க்ளவுட் சேமிப்பக பயன்பாட்டிற்கு காப்புப்பிரதி எடுக்க அனுமதிக்கிறது. ஆனால், ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு சாட் வரலாறு இடம்பெயர்வதை ஆதரிக்காது. வரவிருக்கும் புதுப்பித்தலுடன் இது விரைவில் மாறக்கூடும். வாட்ஸ்அப் பயனர்கள் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறினால் விரைவில் சாட்களை மாற்ற முடியும்.

WABetaInfo-ன் புதிய அறிக்கையின்படி, இந்த செய்தி சேவையானது சாட் வரலாறு இடம்பெயர்வு அம்சத்தை எதிர்கால புதுப்பிப்பில் வெளியிடும். இது வெவ்வேறு சாதனங்களில் சாட் வரலாற்றை நகர்த்த உதவும். மேலும், வலைத்தளம் ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. இது பயனர் அரட்டை வரலாற்றை ஆண்ட்ராய்டு தொலைபேசியில் மாற்ற வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

“பயனர் வேறுபட்ட இயக்க முறைமையைக் கொண்ட சாதனத்தைத் தனது வாட்ஸ்அப் கணக்கில் இணைக்க முயற்சி செய்யும்போது, ஆண்ட்ராய்டு பதிப்பில் எந்தவிதமான பொருந்தக்கூடிய பிழையும் ஏற்படாமல் இருக்க, ஆப் ஸ்டோர் அல்லது டெஸ்ட் ஃப்ளைட்டில் கிடைக்கும் சமீபத்திய வாட்ஸ்அப் புதுப்பிப்பைப் அப்டேட் செய்வது அவசியம்” என்று WaBetaInfo அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது, நீங்கள் iOS-லிருந்து ஆண்டிராய்டு அல்லது ஆண்டிராய்டிலிருந்து iOS-க்கு மாறும்போது, உங்கள் சுயவிவரப் புகைப்படம், பெயர், தனிப்பட்ட சாட்கள், குழு சாட்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட உங்கள் கணக்குத் தகவலை வாட்ஸ்அப் மாற்றுகிறது. ஆனால், இது உங்கள் சாட் வரலாற்றை நகர்த்தாது.

ஆனால், இந்த அம்சத்தின் சரியான வெளியீட்டுத் தேதி இதுவரை தெரியவில்லை. இது பல சாதன அம்சத்துடன் வரக்கூடும். அறிக்கையின்படி, நீங்கள் விரைவில் பல சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.

“இந்த அம்சத்தின் மேம்பாடு நீண்ட நேரம் எடுக்கும். ஏனெனில் இது வாட்ஸ்அப்பில் உங்கள் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். மேலும், பல சாதனங்களுடன் இணக்கமாக இருக்க நிறைய விஷயங்கள் மீண்டும் எழுதப்பட்டுள்ளன” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஒரு “பெரிய மீடியா முன்னோட்டம்” அம்சத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, நீங்கள் வாட்ஸ்அப்பில் பகிரும் படங்கள் முதலில் பதிவேற்றப்பட்ட விதத்தில் தோன்றும். மேலும், பயன்பாடு அதனை க்ராப் செய்யாது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் 2.21.8.1 பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. எனவே, இதை முயற்சி செய்ய விரும்புவோர் சமீபத்திய பதிப்பை நிறுவலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp to make it easier for you to transfer chats between android and ios tamil

Next Story
ஜியோ, வி, ஏர்டெல் : ரூ.300-க்கு கீழ் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்Jio Vodafone Airtel best prepaid plans under Rs 300 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express