மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை அப்டேட்களை வெளியிட்டு பயனர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது எடிட் மெசேஜ் போன்று எடிட் மீடியா கேப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
Advertisment
போட்டோ, வீடியோ, GIF, Documents கீழ் டைப் செய்து அனுப்பபடும் மெசேஜ்கள் தான் மீடியா கேப்ஷன் ஆகும். அந்த வகையில் இந்த மீடியா கேப்ஷன்களையும் எடிட் செய்து கொள்ளும்படி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எடிட் மெசேஜ் போன்றே இந்த அம்சமும் செயல்பட உள்ளது. போட்டோ, வீடியோ அனுப்பிய 15 நிமிடங்களில் டெக்ஸ்ட் எடிட் செய்து கொள்ளலாம். இதனால் நீங்கள் மீண்டும் புதிதாக அந்த போட்டோ, வீடியோ-வை அனுப்ப தேவையில்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இந்த அம்சம் கொண்டு வரப்பட உள்ளது. எனினும் சிலருக்கு இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
உங்கள் போனுக்கு வந்துவிட்டதா?
எடிட் மீடியா கேப்ஷன் அம்சம் உங்களுக்கும் கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள வாட்ஸ்அப் சென்று சில நிமிடங்களுக்கு முன் உங்கள் நண்பர்களுக்கு கேப்ஷனுடன் அனுப்பிய போட்டோ, வீடியோ-வை கிளிக் செய்யவும். கேப்ஷனை டெக்ஸ்டை டேப் செய்யவும். இப்போது 'எடிட்' ஆப்ஷன் காண்பிக்கும். இதைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
எனினும் இந்த அம்சம் பலருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. வரும் நாட்களில் அனைவரது பயன்பாட்டிற்கும் வர உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“