வாட்ஸ் அப்பில் நாள்தோறும் அதிகமான ஃபோட்டோக்களை அனுப்பும் யூசர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
சமீபத்தில் அறிமுகப்படுத்த மெசேஜ் டெலிட் வசதி தொடங்கி, பணவரித்தனை வரை யூசர்களை வாட்ஸ் அப் அதிகளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப் யூசர்கள் அதிகமாக பயன்படுத்துவது ஒன்று ஷேட்டிங் செய்வதற்கு, மற்றொன்று ஃபோட்டோக்களை அனுப்புவதற்கு.
விதமான செல்பீக்கள், ஆல்பங்கள் என நாள் ஒன்றுக்கு யூசர்கள் குறைந்தது 10 ஃபோட்டோக்களை ஆவது தனது நண்பர்களுக்கு பகிர்ந்து விடுகின்றன. இந்நிலையில் தான், வாட்ஸ் அப் நிறுவனம் இந்த புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது, இனி வரும் காலங்களில் யூசர்கள் தங்களின் நண்பர்களுக்கு கேலரியில் இருக்கும் ஃபோட்டோக்களை பகிரும் போதே அதன் பின்புலம், கலர்ஃபுல், எடிட்டிங், வித விதமான எழுத்து வடிவங்கள் ஆகியவற்றை மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது பீட்டா வெர்ஷனில் நடைப்பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.