மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, வாடிக்கைகையாளர்களை கவர பல வகையான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மெட்டாவின் மற்றொரு சமூக ஊடகமான பேஸ்புக்கின் ப்ரொபைல் அம்சத்தை, வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
Advertisment
WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, பேஸ்புக்கில் இருக்கும் கவர் போட்டோ அம்சம், விரைவில் வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கு முன்பு, பேஸ்புக்கின் ரியாக்ஷன் அம்சத்தை, வாட்ஸ்அப் செயலியில் கொண்டு வரப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் குறித்து கூடுதல் தகவல் அறிந்துகொள்ள கவர் போட்டோ அம்சம் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
WABetaInfo கூறியதாவது, வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கில் கவர் போட்டோ அம்சம் கொண்டுவரப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட பிசினஸ் கணக்கின் ப்ரோபலை அணுகும் போது, அவர்களால் கவர் போட்டோவை காண முடியும். இந்த வசதி வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வசதி டெஸ்க்டாப் வாட்ஸ்அப் பிசன்ஸ் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஏற்கனவே பிசினஸ் கணக்கு உபயோகிக்கும் ஐஓஎஸ் யூசர்களுக்கு கவர் போட்டோ அம்சத்தை வழங்கியுள்ளது. எனவே, விரைவில் இந்த வசதி ஆண்ட்ராய்டு பிசினஸ் யூசர்களுக்கும் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வாட்ஸ்அப் சாதாரண பயனர்களுக்கு எடிட் பட்டன் வழங்கும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil