மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது
பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் தவறான மெசேஜ், தெரியாத எண்களில் இருந்து
வரும் அழைப்புகளை புகாரளிக்க புது வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
WABetaInfo படி, வாட்ஸ்அப்-பில் வரும் inappropriate messages மற்றும் தெரியாத எண்களில் இருந்து silence calls-களைப் புகாரளிக்க புது வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. inappropriate messages அம்சம் குரூப் சேட்-ல் செயல்படுத்தப்படுகிறது. குரூப் அட்மின் அதை பரிசீலனை செய்து டெலிட் செய்யலாம். குரூப் அட்மின் அந்த மெசேஜை அனைவரிடத்தில் இருந்தும் டெலிட் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அடுத்தாக, தெரியாத எண்களில் இருந்து silence calls-களை புகாரளிக்கலாம். அதற்கு ப்ரைவசி செட்டிங்க்ஸ் சென்று mute calls from unknown phone numbers எனக் கொடுத்து அழைப்புகளை தவிர்க்கலாம். இருப்பினும் அது குறித்தான நோட்டிவிக்கேஷன் உங்கள் ‘Calls’ tab பக்கத்தில் கொடுக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“