உலகளவில் பல சாட்டிங் செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர அப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது வரவிருக்கும் புதிய அப்டேட்டில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களுக்கு நேரடியாக சாட்களை மாற்றுவதற்கான வசதியை வழங்கவுள்ளது.
முன்னதாக, வாட்ஸ்அப் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட அப்டேட்டில், iOS பயனர்கள் தங்கள் சாட்களை சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் சாதனங்களுக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இது விரைவில் மற்ற சாதனங்களுக்கு கிடைக்கும் வகையில் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கிறது.
WABetaInfo தகவலின்படி, சாட்டை இம்போர்ட் செய்வதற்கான அனுமதி திரையில் காண்பிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியம்சமாக, இந்த அப்டேட்டின் ஸ்கீரின்ஷாட்டை பார்க்கையில், ஒரு தடவை மட்டும் சாட்களை ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோன் சாதனங்களுக்கு மாற்றிடமுடியும். ஒருவேளை, மிஸ் செய்தால், மீண்டும் சாட்களை மாற்றும் வசதி திரையில் கேட்கப்படாது.

சாட்களை இம்போர்ட் செய்திட, முதலில் ‘Move to iOS’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம், பாதுகாப்பாக கான்டக்ட்ஸ், சாட், போட்டோஸ்களை எளிதாக மாற்றிட முடியும். டேட்டா மாற்றும் ஆப்ஷனில் கிளிக் செய்ததும், செயலி தனிப்பட்ட வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கி அருகிலுள்ள Android சாதனங்களை தேடுவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது.
அப்போது, உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வேண்டும். கிளிக் செய்ததும், பாதுகாப்பு கோடை பதிவிட்டால், டேட்டா இம்போர்ட் பிராசஸ் தொடங்கிவிடும். இந்த செயல்முறையின்போது, செல்போன் மற்றும் செயலியை ஒப்பனில் வைத்திருக்க வேண்டும்.
இதற்கிடையில், வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் படங்களை அனுப்புவதற்கு முன்பு, அவற்றை எடிட் செய்வதற்கான வசதிகளை வழங்குகிறது. இமேஜில் எடிட்டிங் செய்திட மூன்று வகையான பென்சில் சைஸ் மற்றும் விருப்பங்களை திரையில் பெறுவீர்கள். இதுதவிர, இமேஜ்களை அனுப்பும் போது, அதனை blur செய்து அனுப்பும் வசதியும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil