இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் உலக முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் சேட் அம்சத்தில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப் தனியாக உறவினர்கள் வாட்ஸ்அப் குரூப் தனியாக அலுவலக வாட்ஸ்அப் குரூப் எனப் பல குரூப்களில் நாம் இணைந்திருப்போம்.
இதில் சில நேரங்களில் நமக்கு தெரியாத நபர்களும் குரூப்பில் இணைந்திருப்பர்.
இந்தநிலையில், அவ்வாறு நம்பர் பதிவு செய்யாத unknown contact-களிடம் இருந்து வரும் மெசேஜ் நோட்டிவிக்கேஷன் அவர்களின் மொபைல் நம்பர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். குரூப் சேட் பக்கம் சென்று பார்த்தால் மட்டுமே அவர்களின் username தெரிய வரும்.
இந்தநிலையில் தற்போது புது அப்டேட்டில் வாட்ஸ்அப் குரூப் பக்கத்தில் unknown contact-யிடம் இருந்து மெசேஜ் வந்தால் அவர்களின் மொபைல் எண்ணிற்கு பதில் அவர்களுடைய பெயர் (username) நோட்டிவிக்கேஷனில் வரும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. நிறைய உறுப்பினர்கள் உள்ள குரூப்-பில் இருந்து மெசேஜ் வருகையில் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் அட்மின் பயன்பாட்டிற்கான Approval feature அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“