வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை திரும்ப படிக்க முடியும்.. எப்படி தெரியுமா? | Indian Express Tamil

வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை திரும்ப படிக்க முடியும்.. எப்படி தெரியுமா?

WhatsApp trick: வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை, அதாவது (Delete for everyone)கொடுக்கப்பட்ட மெசேஜை படிக்க விரும்பினால், அதை செய்ய முடியும். அது பற்றி இங்கு பார்ப்போம்.

வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜை திரும்ப படிக்க முடியும்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். தகவல் பகிர்ந்து கொள்ள எளிதாக இருப்பதால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. மெசேஜிங், ஆடியோ கால், வீடியோ கால், லொகேஷன் சேரிங் வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. சமீபத்தில் கூகுள் பே, போன் பே போன்று வாட்ஸ்அப் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்கள் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியும் உள்ளது. அதாவது, தங்களுக்கு மட்டும் டெலிட் செய்வது (Delete for me) மற்றொன்று யாருக்கும் காண்பிக்காத படி டெலிட் செய்வது (Delete for everyone) ஆப்ஷன் கொடுப்பது.

அப்படி, Delete for everyone கொடுத்த மெசேஜை படிக்க விரும்பினால், அதை படிக்க முடியும். இதற்கு மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் டவுன்லோடு செய்ய வேண்டும்.

டெலிட் செய்யப்பட்ட மெசேஜை படிப்பது எப்படி?

Step 1: முதலில் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து ‘Get Deleted Messages’ என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

Step 2: அடுத்து இந்த செயலியைப் பயன்படுத்த சில அனுமதிகளை கேட்கும். அதைக் கொடுத்த பிறகு செயலி ஓபன் ஆகும்.

Step 3: வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஏதும் செய்யப்பட்டால், இந்த செயலியைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: இந்த செயலி backgroundயில் இயங்குவதற்கான அனுமதி கேட்கும். அதற்கு உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் -ஆப்ஸ் & நோட்டிபிக்கேஷன் சென்று அனுமதி கொடுக்க வேண்டும். இது தவிர, நோட்டிபிக்கேஷன் மற்றும் ஸ்டோரேஜிற்கு அனுமதி கேட்கும்.

மேலும் ஒரு நபரின் வாட்ஸ்அப் பக்கத்தை ஓபனில் வைத்திருக்கும் போது, மெசேஜ் டெலிட் செய்யப்பட்டால் அதை திரும்ப பார்க்க முடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp trick how to read deleted messages

Best of Express