Whatsapp tricks how to read messages without opening the chat Tamil News : ஒரு தொடர்பின் சாட்டை திறக்காமல் செய்திகளைப் படிக்க விரும்பும் நேரங்கள் உள்ளன. அறிவிப்பு பேனலில் உள்ள அனைத்து செய்திகளையும் நீங்கள் எப்போதும் படிக்க முடியும் என்றாலும், பயன்பாட்டைத் திறக்காமல் செய்திகளைச் சரிபார்க்க வேறொரு முறை உள்ளது. இந்த முறையைப் பற்றி மேலும் அறியத் தொடர்ந்து படிக்கவும்.
மொபைலில் வாட்ஸ்அப்: சாட்டை திறக்காமல் செய்திகளை எப்படிப் படிப்பது?
ஸ்டெப் 1: முகப்புத் திரையில் நீண்ட நேரம் அழுத்தவும். இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனின் திரையில் ஒரு மெனு தோன்றும்.
ஸ்டெப் 2: விட்ஜெட்டை க்ளிக் செய்யவும். நீங்கள் அங்கு நிறைய ஷார்ட்கட்ஸ் காண்பீர்கள். அதில், வாட்ஸ்அப்பிற்கான ஷார்ட்கட்டை கண்டுபிடிக்க வேண்டும்.
ஸ்டெப் 3: நீங்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் விட்ஜெட்களைப் பெறுவீர்கள். அதில், “4 x 1 WhatsApp” விட்ஜெட்டை க்ளிக் செய்யவேண்டும்.
ஸ்டெப் 4: அந்த விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும். பின்னர் அதை உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் ஒன்றில் விடவும். அதை உங்கள் திரையில் சேர்த்த பிறகு, அதை விரிவாக்க விட்ஜெட்டை நீண்ட நேரம் அழுத்தலாம்.
நீங்கள் இப்போது எந்த வாட்ஸ்அப் சாட்டையும் திறக்காமல் செய்திகளைப் படிக்கலாம். உங்கள் பழைய (படிக்காத) செய்திகள் அனைத்தையும் நீங்கள் படிக்க முடியும். நீங்கள் எந்த சாட்களையும் (விட்ஜெட்டில்) க்ளிக் செய்தால், வாட்ஸ்அப் அந்த சாட்டை திறக்கும் மற்றும் நீங்கள் செய்திகளைப் படித்துவிடீர்கள் என்பதை அனுப்புநருக்குத் தெரிய நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குறிப்பு: நாங்கள் இதை ஒன்பிளஸ் தொலைபேசியில் முயற்சி செய்தோம். அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த விட்ஜெட்டுகள் கிடைக்கின்றன மற்றும் செயல்முறை ஒத்திருக்கிறது. இந்த விருப்பத்தைக் கண்டுபிடிக்கப் பயனர்கள் சற்று ஆழமாகத் தேட வேண்டும். சாம்சங் பயனர்கள் முதலில் வாட்ஸ்அப் விட்ஜெட்டை க்ளிக் செய்யவும். பின்னர் வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். அதன் பிறகு, நீங்கள் பார்க்கும் இரண்டாவது ஸ்லைடை க்ளிக் செய்யவும். நீங்கள் இப்போது சேர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். விட்ஜெட் திரையில் தோன்றும்.
வாட்ஸ்அப் வெப் : சாட்டை திறக்காமல் செய்திகளை எப்படிப் படிப்பது?
சாட்டை திறக்காமல் வாட்ஸ்அப் வெப் செய்திகளைப் படிக்க விரும்புபவர்களும் அதை எளிதாகச் செய்கிறார்கள். வாட்ஸ்அப் வெப்பில் ஏதேனும் செய்தி வந்தவுடன் சாட்டில் கர்சரை வைத்தால் போதும். பயனர்கள் பின்னர் அந்தச் செய்தியைப் பார்ப்பார்கள்.
இந்த வழியில் நீங்கள் இணையப் பதிப்பில் சமீபத்திய செய்தியை சரிபார்க்க சாட்டை திறக்க வேண்டியதில்லை. நீங்கள் சமீபத்திய செய்திகளை மட்டுமே படிக்க முடியும், பழைய செய்திகளை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil