வாட்ஸ்ஆப் செய்திகள் உண்மையா பொய்யா? சரி பார்ப்பது மிக எளிது!

இந்தியாவில் 40 கோடி மக்கள் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

By: Updated: March 3, 2020, 04:03:13 PM

whatsapp tricks to spot and stop fake news : சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் எது உண்மை அல்லது எது பொய் என்பதை ஆராய்வதற்குள் அந்த செய்தி வைரலாகி அனைத்தும் தலைகீழாய் முடிந்துவிடும். பொய்யான செய்திகளை உண்மையென நினைத்துக் கொண்டு பல இடங்களில் வன்முறை அரங்கேற்றங்களும் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில் 40 கோடி மக்கள் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பொய்யான செய்திகளின் பரவலை தடுப்பதில் வாட்ஸ்ஆப்பின் பங்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

WhatsApp tricks to spot and stop fake news

ஃபார்வர்ட் மெசேஜ்

வாட்ஸ்ஆப்பில் வரும் செய்திகளில் மிகவும் அதிகமாக பகிரப்பட்ட செய்திகளின் மேல் Forwarded என்ற லேபிள்கள் வருகிறது. 5-க்கும் மேற்பட்ட முறை ஒரு செய்திகளை ஷேர் செய்தால் அதில் “Frequently Forwarded” என்ற டேக் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த செய்திகளின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள இயலும்.

Check photos and media carefully

உங்களுக்கு வரும் புகைப்படங்களை கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம். உங்களுக்கு வரும் புகைப்படங்கள், ஆடியோ க்ள்ப்கள், மற்றும் வீடியோக்களை நம்ப வேண்டாம். அவை எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டும் கூட உங்களுக்கு  வரும். நம்பகத்தன்மையான ஊடகங்கள் வாயிலாக வரும் புகைப்படங்களை மட்டும் நம்புங்கள்.

Look out for hoax messages

சில உண்மைக்குப் புறம்பான செய்திகளை மட்டுமே வழங்கும் இணைய தளங்கள் இருக்கிறது. மக்கள் அதில் வரும் செய்திகளை அப்படியே உண்மையென நம்பி அதனை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது போன்று பரபரப்படும் லிங்க்குகளை நன்றாக கவனியுங்கள். அதில் இருக்கும் எழுத்துப்பிழை, விடுபட்டிருக்கும் URL-ன் https ஆகியவற்றை அடையாளம் கண்டு நீங்கள் அந்த செய்திகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

Check your biases before sharing the information

ஷேர் செய்வதற்கு முன்பு உங்கள் கையில் இருக்கும் அந்த செய்தியின் உண்மைத் தன்மைகளை ஆராயுங்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவையா, போலியானவையா என்பதை உங்களின் வட்டாரங்களின் உதவி மூலமாக அறிந்திடுங்கள். அதன் பின்னர் நீங்கள் இந்த செய்திகளை பரப்பலாம்.

Fake news often goes viral

சில நேரங்களில் தவறான செய்திகள் தான் அதிக அளவில் வைரலாக்கப்படும். எனவே வைரல் செய்திகள் உங்கள் கண்ணில் பட்டால் அந்த செய்தியின் உண்மைத் தன்மையை உங்களுக்கு அனுப்பியவரிடமே திருப்பிக் கேளுங்கள் என்றும் வாட்ஸ்ஆப் உங்களுக்கு அறிவிக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp tricks to spot and stop fake news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X