Advertisment

பொய்ச் செய்தி பார்த்து பதற வேண்டாம்: வாட்ஸ் அப் புதிய வசதி

WhatsApp: பயனர்கள் கரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அம்பலப்படுத்துவதற்கான மிகப்பெரிய தரவுத்தளத்துடன் இணைக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp business, tata sky, tata sky on whatsapp, tata sky account details on whatsapp

WhatsApp IFCN’s bot, WhatsApp Tamil news, WhatsApp news in tamil, வாட்ஸ் அப் மெசேஜ், வாட்ஸ் அப் மெசேஜ் சரிபார்த்தல்

WhatsApp update: வாட்ஸ் ஆப் நீண்ட காலமாக அதன் மேடையில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க மிகவும் கடினமாக முயற்சித்து வருகிறது. கடந்த மாதம் முதல் அடிக்கடி பார்வர்ட் செய்யப்படும் குறுஞ்செய்திகளுக்கு ஒரு கட்டுப்பாடை விதித்துள்ளது.

Advertisment

பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இந்த குறுஞ்செய்தியிடல் மேடை இப்போது Poynter Institute’s International Fact-Checking Network (IFCN) உடன் இணைந்து உள்ளூர் உண்மை சரிப்பார்பவர்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் போலி செய்திகளை பயனர்கள் கண்டுபிடிக்க உதவுகிறது. பயனர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பினால் மட்டும் போதும், சரிப்பார்பவர்கள் அதை சீராய்வு செய்வார்கள்.

WhatsApp update Tamil news: வாட்ஸ் அப் மெசேஜ் சரிபார்த்தல்

கோவிட் -19 தொற்றுக் காலத்தில் தவறான தகவல்கள் பரவுவதை நிவர்த்தி செய்வதற்காக IFCN தனது WhatsApp chatbot ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சுதந்திரமான உண்மை கண்டுபிடிப்பாளர்களுடன் மக்களை இணைப்பதே இந்த முயற்சியின் இலக்காகும்.

இந்த இணைப்பின் மூலம் வாட்ஸ் ஆப் பயனர்கள் கரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அம்பலப்படுத்துவதற்கான மிகப்பெரிய தரவுத்தளத்துடன் இணைக்கப்படுவார்கள்.

IFCN’s bot on WhatsApp உதவியுடன் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் கோவிட்-19 தொடர்பான ஒரு தகவல் தொழில்முறை உண்மை சரிப்பார்ப்பவர்களால் தவறானது என மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை எளிதாக சரிப்பார்க்க முடியும். பயனர் ஒரு தகவலை சீராய்வு செய்ய நேரடியாக உள்ளூர் உண்மை சரிப்பார்பவரிடம் சம்ர்பிக்க முடியும்.

IFCN’s bot பயன்படுத்துவதற்கு இலவசம். இதை பயன்படுத்த வாட்ஸ் ஆப் பயனர் +1 (727) 2912606 என்ற எண்ணை தொடர்பு எண்ணாக சேமிக்க வேண்டும். பிறகு bot ஐ ஆரம்பிக்க ‘hi’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். http://poy.nu/ifcnbot என்பதையும் பயனர்கள் சொடுக்கலாம்.

இப்போதைக்கு IFCN’s bot ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும், ஹிந்தி, Spanish மற்றும் Portuguese ஆகிய மொழிகளில் துணை விரைவில் வருகிறது.

கோவிட் -19 தொடர்பான நம்பகமான தகவல்களை பயனர்கள் பெற உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation (WHO)) மற்றும் இந்திய அரசின் MyGov app உடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் கடந்த மாதம் சேவைகளை அறிமுகப்படுத்தியது. இது போன்ற சேவைகளை டெல்லி (+91 88000 07722), மஹாராஷ்டிரா (+91 20 2612 739), குஜராத் (+91 74330 00104), தெலுங்கானா (+91 90006 58658) மற்றும் கேரளா (+91 90722 20183) ஆகிய மாநில அரசுகளுடன் மேடை அறிமுகப்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Whats App
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment