வாட்ஸ்அப் தற்போது அசத்தலான, பலரும் எதிர்பார்த்து வரும் அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. ஆம், வாட்ஸ்அப் மூலம் இனி வெளிநாடுகளுக்கும் எளிதாக பணம் அனுப்பும் வகையில் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, வாட்ஸ்அப்பில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ) மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் வகையில் புதிய அம்சத்தை சோதனை செய்வது வருகிறது. “International Payments” என்ற பெயரில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
இந்த அம்சம் இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள், சர்வதேச UPI சேவைகள் ஆக்டிவேட் செய்யப்பட்டபின் நேரடியாக வெளிநாடுகளில் உள்ள பயனருக்கு அனுப்பலாம். எனினும் “International Payments” அம்சத்தை பயனர் Manual ஆக ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கும் வாட்ஸ்அப் கால அவகாசம் கொண்டுள்ளது.
வாட்ஸ்அப் ஏற்கனவே பணப் பரிவர்த்தனை செய்யும் அம்சத்தை கொண்டுள்ளது. இருப்பினும் அது இந்தியாவிற்குள் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கும் பயன்படுத்தும்படி தற்போது புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“