வாட்ஸ்அப் புதிய அப்டேட் வந்தாச்சு: இனி 3 மெசேஜ்களை பின் செய்யலாம்

வாட்ஸ்அப்பின் ஒவ்வொரு ஷேட் பக்கத்திலும் இனி 3 மெசேஜ்கள் வரை பின் செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் ஒவ்வொரு ஷேட் பக்கத்திலும் இனி 3 மெசேஜ்கள் வரை பின் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
Pin whats.jpg
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தின் top-ல் 3 மெசேஜ்கள் வரை பின் செய்யும் வகையில் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக தனி நபர் அல்லது குரூப் ஷேட் பக்கத்தில் ஒரு ஷேட் மட்டுமே பின் செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 3-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப் மெசேஜ் எப்படி பின் செய்வது?

Advertisment

வாட்ஸ்அப் தனி நபர் அல்லது குரூப் ஷேட் பக்கத்தில் மெசேஜ்களை பின் செய்யலாம். இதை செய்வது மிகவும் எளிது. எந்த குறிப்பிட்ட மெசேஜை பின் செய்ய வேண்டுமோ அதை  long-press செய்து பின் கொடுத்தால் அந்த ஷேட் பக்கத்தின் top-ல் பின் செய்யப்படும். அதை அந்த ஷேட்டில் உள்ள அனைவரும் பார்க்க முடியும். டெக்ஸ்ட், வீடியோ, ஆடியோ என அனைத்தையும் பின் செய்யலாம். அதோடு எவ்வளவு காலம் பின் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றையும் குறிப்பிடலாம். 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 30 நாட்கள் வரை அதைபின் செய்து வைக்கலாம்.

இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Whatsapp Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: