1 அல்ல, 2 இல்ல… ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் கனெக்ட் செய்யலாம்; எப்படினு தெரிஞ்சுகோங்க!

உங்கள் பிரைமரி டிவைஸை பயன்படுத்தவில்லை என்றாலும் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

whatsapp
whatsapp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் போன் செயலி, கம்ப்யூட்டர், லேப்டாப், டேப் என பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக அலுவலக வேலை செய்வதற்கு கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ்அப் கனெக்ட் செய்து பயன்படுத்துவது பெரிதும் உதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் வாட்ஸ்அப் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம் என மெட்டா அறிவித்துள்ளது.

இந்த சமயங்களில் உங்கள் பிரைமரி டிவைஸில் (போன்) சார்ஜ் இல்லையென்றாலும், நெட் ஆன்னில் இல்லையென்றாலும், நீங்கள் பயன்படுத்தவில்லையென்றாலும் மற்ற சாதனங்களில் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.

மேலும் Windows desktop எனப்படும் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில், போன் வாட்ஸ்அப் போல் வீடியோ கால், வாய்ஸ் கால் செய்து கொள்ளும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த வசதியை அப்டேட் செய்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பல்வேறு சாதனங்களில் எவ்வாறு வாட்ஸ்அப் கனெக்ட் செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

  1. உங்கள் போன் நம்பர் லிங்க செய்யப்பட்ட பிரைமரி டிவைஸில் வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ளலாம். அதாவது உங்கள் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும்.
  2. அதில் செட்டிங்க்ஸ் மெனு சென்று Linked Devices செலக்ட் செய்யவும்.
  3. அடுத்து Link a New Device எனக் கொடுத்து அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுக்கவும்.
  4. இப்போது இரண்டாவது டிவைஸில் (கம்ப்யூட்டர், லேப்டாப்) வாட்ஸ்அப் ஓபன் செய்யவும். (web.whatsapp.com) பயன்படுத்தவும்.
  5. உங்கள் இரண்டாவது டிவைஸில் உள்ள வாட்ஸ்அப் QR கோட்டை ஸ்கேன் செய்யவும்.
  6. சிறிது நேரம் காத்திருக்கவும். sync up செய்யப்படும். உங்கள் இரண்டாவது டிவைஸில் இப்போது வாட்ஸ்அப் சேட் காணப்படும்.
  7. இதே போன்று மற்ற சாதனங்களிலும் வாட்ஸ்அப் sync செய்து பயன்படுத்தலாம்.
  8. எந்தநேரத்திலும் மற்ற டிவைஸ்களில் உள்ள வாட்ஸ்அப்பை log out செய்யலாம்.

அதேநேரத்தில் உங்கள் போனை 14 நாட்கள் பயன்படுத்தவில்லை என்றால் மற்ற டிவைஸ்களில் sync செய்யப்பட்ட வாட்ஸ்அப் log out ஆகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp users can use their account on 4 devices at the same time

Exit mobile version