வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ்அப் புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் தனி நபர் சேட் பக்கத்தை லாக் செய்து கொள்ளும்படி 'Lock Chat' என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. WABetaInfo தகவல்படி, Fingerprint அல்லது passcodes பயன்படுத்தி தனி நபர் சேட்களை லாக் செய்து கொள்ளும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த லாக் அம்சம் தனி பிரிவாக செயல்பட உள்ளது. லாக் செய்யப்பட்ட சேட்களை Fingerprint அல்லது passcodes இல்லாமல் வேறு நபர்கள் பயன்படுத்த முடியாது.
அதையும் மீறி உங்கள் லாக் செய்யப்பட்ட சேட்டை பயன்படுத்த முயன்றால், பலமுறை தவறான passcodes பயன்படுத்தினால் உங்கள் சேட் அழிக்கப்பட வேண்டும். அதோடு அதன் Media பைல்களையும் Hide செய்து வைக்கலாம். Gallery-யில் save ஆகாமலும் செய்து வைக்கலாம்.
இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“