வாட்ஸ்அப் பிரபலமான சமூகவலைதளமாகும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். காரணம் இது பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது. எளிதாக தகவலை அனுப்ப முடிகிறது. வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களை மகிழ்விக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
Advertisment
அந்தவகையில் தற்போது ‘Undo delete’ மெசேஜ் என்ற புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது நாம் டெலிட் செய்த மெசேஜை திரும்ப பெற முடியும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் பீட்டா (WhatsApp beta v2.22.18.13)பயன்படுத்துபவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்தில், ஒரு மெசேஜை டெலிட் செய்யும்போது ஜிமெயிலில் வருவதுபோல், ‘Undo’ வசதி திரையில் காண்பிக்கப்படும். நாம் அதைப்பயன்படுத்தி மீண்டும் அந்த மெசேஜை பெறலாம். தவறுதலாக மெசேஜை டெலிட் செய்துவிட்டோம் என்றால், இதைப்பயன்படுத்தி மீண்டும் அந்த மெசேஜை பெறலாம். ஆனால் ‘Undo delete Message’ அம்சம் சில விநாடிகள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 புது வசதிகள் அறிமுகம்
இதேபோன்று ‘Delete for me’ என்ற ஆப்ஷன் கொடுத்தால் இந்த புதிய வசதி ‘Undo delete Message’ வசதி பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் போன் கூகுள் பிளே ஸ்டோர் சென்று WhatsApp Beta program டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு 3 புது வசதிகளை அறிமுகப்படுத்தியது. நோட்டிபிகேஷன் கொடுக்காமல் குரூப்பிலிருந்து வெளியேறுவது, ‘View once’ மெசேஜை ஸ்கிரின்சாட் எடுக்க முடியாது, online status காண்பிப்பதை நிர்வகிப்பது என 3 அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதேபோன்று நேட்டிவ் வாட்ஸ்அப் விண்டோஸ் ஆப் அனைவரது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.