Whatsapp users not accepting privacy terms Tamil News : வாட்ஸ்அப் அதன் புதிய தனியுரிமை புதுப்பிப்பை ஏற்றுக்கொள்ளாததற்காக எந்தவொரு கணக்கையும் நீக்காது ஆனால், “பல வாரங்களுக்கும்' பிறகும் சர்ச்சைக்குரிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் தங்கள் சாட் பட்டியலை அணுக முடியாது. மேலும், பயன்பாட்டின் மூலம் உள்வரும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பிற்கு பதிலளிக்கவும் முடியாது.
கடந்த வாரம், ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்நிறுவனம், அதன் மே 15 காலக்கெடுவிற்குள் அதன் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பைப் பயனர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அந்த தேதியில் கணக்குகளை நீக்கவோ அல்லது செயல்பாட்டை இழக்கவோ மாட்டாது என்று கூறியிருந்தது.
இந்த விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டுவதாகவும், பல வாரங்களுக்குப் பிறகும், “மக்கள் பெறும் நினைவூட்டல் தொடர்ந்து நிலைத்திருக்கும்” என்று வாட்ஸ்அப் தனது இணையதளத்தில் பதிவிட்டது.
எப்படியிருந்தாலும், இந்த நினைவூட்டல்களுக்கான காலக்கெடுவை அது வெளியிடவில்லை.
பயனர்களுக்கு ‘தொடர்ச்சியான’ நினைவூட்டல்கள் அனுப்பப்பட்ட பின்னரும் அப்டேட்டுகளை ஏற்காவிட்டால், "நீங்கள் புதுப்பிப்புகளை ஏற்றுக்கொள்ளும் வரை வாட்ஸ்அப்பில் மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாட்டை சந்திப்பீர்கள்” என்று மேலும் வாட்ஸ்அப் கூறியது.
“இது எல்லா பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் நடக்காது. உங்கள் சாத் பட்டியலை நீங்கள் அணுக முடியாது. ஆனால், உள்வரும் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கலாம். நீங்கள் நோட்டிஃபிகேஷன் ஆன் செய்து வைத்திருந்தால், உங்களுக்கு வரும் செய்தியைப் படிக்க அல்லது பதிலளிக்க அவற்றை க்ளிக் செய்யலாம் அல்லது தவறவிட்ட தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பைத் திரும்ப அழைக்கலாம்” என்றும் குறிப்பிடுகிறது.
சில வாரங்கள் வரையறுக்கப்பட்ட செயல்பாட்டிற்குப் பிறகு, "உள்வரும் அழைப்புகள் அல்லது அறிவிப்புகளையும் பெற முடியாது. மேலும், உங்கள் தொலைபேசியில் செய்திகளையும் அழைப்புகளையும் அனுப்புவதை வாட்ஸ்அப் நிறுத்திவிடும்" என்றும் வாட்ஸ்அப் எச்சரித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil