வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். தகவல்களை மற்றவருக்கு பகிர்வது எளிதாக இருப்பதால் பலரும் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனமும் தங்கள் பயனர்களை கவர புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் தற்போது, வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு (ஐபோன்) பயனர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது பழைய மெசேஜ்களை திரும்ப எடுத்து படிப்பதற்கு வசதியாக தேதி குறிப்பிட்டு தேடும் வகையில் காலண்டர் ஐகான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
WABetaInfo கூறுகையில், கடந்த வாரம், வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு UPI மூலம் பணம் அனுப்பும் வசதியை எளிதாக்கியது. அந்தவகையில் தற்போது, iOS பயனர்களுக்கு காலண்டர் ஐகான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா iOS 22.0.19.73 இல் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் தனிநபருக்கு முன்பு அனுப்பிய மெசேஜை பார்க்க விரும்பினால் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முதலில் அவர்களது சேட் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் காலண்டர் ஐகான் கிளிக் செய்தால், காலண்டர் காண்பிக்கப்படும். அதில் எந்த தேதியில் பேசிய மெசேஜ் வேண்டும் என்று தேதி குறிப்பிட்டு செலக்ட் செய்யலாம். காலண்டர் வேண்டாம் என்றால் சேட் பக்கத்தில் scroll செய்தால் காலண்டர் மறைந்துவிடும்.
குறிப்பிட்ட தேதியில் பேசிய மெசேஜ் திரும்ப சென்று படிக்க வேண்டும் அல்லது தகவல் ஏதேனும் எடுக்க வேண்டும் என்றால் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் இந்த அம்சம் முதலில் வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கவில்லை.
முன்னதாக இந்தாண்டு ஜூலை மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் 2.4 மில்லியனுக்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை முடக்கியது. மேலும் iOS 10 மற்றும் iOS 11 மாடல் ஐபோன்களில் இனி வாட்ஸ்அப் செயல்படாது எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன்எ க்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil