WhatsApp users sent over 100 billion messages on new year eve : புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைவரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ந்தோம். வாட்ஸ்ஆப் தற்போது எவ்வளவு மக்கள் எத்தனை மெசேஜ்களை நியூ இயர் முதல் நாள் அன்று அனுப்பியுள்ளனர் என்று தகவல் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி உலக அளவில் 100 பில்லியன் மெசேஜ்கள் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 பில்லியன் நபர்கள் வாட்ஸ்ஆப் மூலம் அன்று மட்டும் தகவல்களை பரிமாறியுள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் இவ்வளவு மெசேஜ்களை அனுப்பியது இது தான் முதல்முறை என்று கூறியுள்ளர் வாட்ஸ்ஆப் நிறுவனம். அனுப்பப்பட்ட 100 பில்லியன் மெசேஜ்களில் 12 பில்லியன் மெசேஜ்கள் பிக்சர் மெசேஜ்கள் ஆகும். கடந்த ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்டின் போது சுமார் 75 பில்லியன் மெசேஜ்கள் அனுப்பப்பட்டது. அதில் 20 பில்லியன் மெசேஜ்கள் இந்தியாவில் இருந்து அனுப்பட்டது.
13 பில்லியன் இமேஜ்களும், 5 பில்லியன் வீடியோக்களும் அந்த 75 பில்லியன் மெசேஜ்களில் அடங்கும். டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஸ்டேட்டஸ்கள், பிக்சர் மெசேஜ்கள், கால்கள் மற்றும் வாய்ஸ் நோட்ஸ்கள் என்று ரணகளப்படுத்திவிட்டனர் பயனாளர்கள் என்கிறது வாட்ஸ்ஆப். வாடிக்கையாளர்களின் விருப்பமான வாழ்ந்த்து அனுப்பும் முறையே மேலே பட்டியல் இடப்பட்டுள்ளது.