மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் வாரம் ஒரு முறை புது புது அப்டேட்களை வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
அதில் வாட்ஸ்அப் குரூப்-க்கு நாம் பெயர் வைக்கத் தேவையில்லை. பெயரே இல்லாமல் வாட்ஸ்அப் குரூப்-பை கிரியேட் செய்வதாகும். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது இந்த Unnamed groups-ல் 6 உறுப்பினர்கள் இருக்கலாம். இந்த புது அம்சம் மூலம் உறுப்பினர்களின் பெயரைக் கொண்டு வாட்ஸ்அப்-பே பெயர் கிரியேட் செய்து வைக்கிறது. எ.கா குரூப்-ல் 2 பேர் ஸ்ரேயா மற்றும் சரண்யா இருக்கிறார்கள் என்றால் வாட்ஸ்அப் தானாக ஸ்ரேயா மற்றும் சரண்யா என்று பெயரிடுகிறது.
இதிலும் ட்விஸ்ட்
அதாவது பெயரை பொதுவாக குறிப்பிடாமல் உங்கள் போனில் அவர்களின் பெயரை எவ்வாறு Save செய்து வைத்திருக்கிறீர்களோ அவ்வாறே குரூப் பெயரும் இடம்பெறும். இது பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், உங்களுக்கு தெரியாத நபர்கள் குரூப்பில் இருந்தால் அவர்களின் நம்பர் மட்டும் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”