அசத்தல்! மெட்டா குவெஸ்ட் உடன் இணைப்பு: இனி வெர்ச்சுவல் ரியாலிட்டியில் வாட்ஸ்அப்

Meta Quest: வெர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான மெட்டா குவெஸ்ட் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Meta Quest: வெர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான மெட்டா குவெஸ்ட் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
WhatsApp

WhatsApp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது வெர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான மெட்டா குவெஸ்ட் உடன் இணைந்து அதிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Advertisment

WABetaInfo இன் சமீபத்திய அறிக்கை படி, வாட்ஸ்அப் கணக்கை மெட்டா குவெஸ்ட் உடன் இணைக்கும் திறனில் டெவலப்பர்கள் பணியாற்றி வருவதாக கூறியுள்ளது. புதிய அம்சம் ஆண்ட்ராய்டு 2.23.13.6க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டது. இருப்பினும் பீட்டா வெர்ஷனிலும் முழுமையாக கிடைக்கவில்லை.

வாட்ஸ்அப் கணக்கை மெட்டா குவெஸ்ட் உடன் இணைக்கும் போது இணைக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலை விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் காண்பிக்கும். அதாவது புதிய அப்டேட்டுடன் ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 சாதனங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதை சரிபார்த்தப் பிறகு மெட்டா குவெஸ்ட் உடன் இணைத்து வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் இல் உள்ள அனைத்து வசதிகளையும் கால், மெசேஜ் என அனைத்தையும் பயன்படுத்தலாம். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிளின் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மெட்டா நிறுவனம் குவெஸ்ட் 3 மாடலை 499 டாலருக்கு அறிமுகம் செய்தது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: