மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது புதிய வசதி ஒன்றை சோதனை செய்து வருகிறது. வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் (voice transcription) அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது, ஆடியோ மெசேஜ்களை டெக்ஸ்டாக படிக்க இந்த அம்சம் பயன்படுத்தப்படும்.
இது தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.7.7 மூலம் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் பயனர்கள் டிரான்ஸ்கிரிப்ஷனை அன்லாக் செய்ய கூடுதலாக 150 எம்.பி டேட்டா செலவிட வேண்டும். டிரான்ஸ்கிரிப்ஷன் டவுன்லோடு செய்யப்பட்டதும், ஆடியோவை கேட்டாகமலே டெக்ஸ்ட் மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் உங்கள் போனில் உள்ள Speech recognition பயன்படுத்தி என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரிப்ட்களை வழங்குகிறது. அதோடு பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் உங்கள் மொபைலிலேயே செய்யப்படும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“