எம்.பி.4 வீடியோ ஃபைல்கள் மூலம் வாட்ஸ்ஆப்பை தாக்கும் புதிய வைரஸ்

வாட்ஸ்ஆப் செயலியை கூகுள் ப்ளே மூலம் தற்போது நீங்கள் அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

Whatsapp vulnerability uses malicious MP4 video files : பெரிய அளவு பாதிப்பினை உருவாக்கும் ஸ்பைவேர் ஒன்று வாட்ஸ்ஆப் டேட்டாக்களை திருட உருவாக்கப்பட்டிருப்பதாக தி இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் அறிவித்துள்ளது. எம்.பி.4 ஃபார்மெட்களில் வரும் இந்த ஸ்பைவேர் Vulnerability Note CIVN-2019-0181 அதிக அளவு பாதிப்பினை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பைவேரால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்று ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு தங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் எம்.பி.4 ஃபைல்களை வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கு அளிக்கும் போது இந்த ஸ்பைவேர் பரவக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எம்.பி.4 வகை வீடியோக்கள் அனுப்பப்படுவதால் வாட்ஸ்ஆப் டேட்டாக்கள் மட்டுமின்றி செல்போனில் இருக்கும் டேட்டாக்கள் அனைத்தும் திருடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை கூகுள் ப்ளே மூலம் தற்போது நீங்கள் அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ஏற்கனவே பொகாசஸ் என்ற சாஃப்ட்வேர் மூலம் வாட்ஸ்ஆப் பயனாளர்களின் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இது போன்று மீண்டும் ஒரு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

இதன் முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் படிக்க

v2.19.134 இந்த வெர்ஷனுக்கு முந்தைய அனைத்து வாட்ஸ்ஆப் வெர்ஷன்களிலும் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதையும் வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. இந்த வெர்ஷன்களில் சீக்கிரமாக ஸ்பைவேர் தாக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பிஸினஸ் v2.19.44, (ஆண்ட்ராய்ட்), வாட்ஸ்ஆப் (ஐஓஎஸ்) – v2.19.51, வாட்ஸ்ஆப் பிஸினஸ் (ஐஓஎஸ்) v2.19.51 போன்ற வெர்ஷன்களுக்கு முன்பான வாட்ஸ்ஆப் வெர்ஷன்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close