WhatsApp Web Dark Theme : பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் ஏற்கனவே டார்க் தீம்கள் இருக்கிறது. ஆனாலும் வாட்ஸ்ஆப்பின் டெஸ்க்டாக் வெர்ஷனில் இது வரையிலும் டார்க் தீம் வராமலே இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். ஆப்பிளின் ஐ.ஒ.எஸ் 13 மற்றும் ஆண்ட்ராய்டின் 10 இயங்குதளங்கள் ஏற்கனவே இந்த டார்க் மோட் ஆப்சன்களை ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp Web Dark Theme -ஐ பெறுவது எப்படி ?
கூகுள் க்ரோம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூகுள் ஆப் வெப் ஸ்டோர்களுக்கு செல்லவும். அதில் இருக்கும் ஆப்ஸ் ஆப்சன்களில் வெப் ஸ்டோர் என்ற ஆப்சன் இருக்கும். அதில் ஸ்டைலஸ் Stylus என்ற ஆப்சனை தேடவும். stylus.openstyles என்று சொல்லப்படும் எக்ஸ்டென்சனை க்ரோம் ப்ரௌசரில் இணைக்கவும். அதனை க்ளிக் செய்தவுடன் வாட்ஸ்ஆப் வெப்புக்கான ஸ்டைல்ஸ் உங்களுக்கு காட்டப்படும். அதில் இருக்கும் தீம்களில் உங்களுக்கு பிடித்தமான தீம்களை தேர்வு செய்யவும்.
அது தானாகவே வாட்ஸ்ஆப்பிற்கான டார்க் தீம்களில் இணைக்கப்பட்டுவிடும். ஆனாலும் யோசித்துக் கொள்ளுங்கள் இது வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் கிடையாது. இந்த எக்ஸ்டென்ஸன் உங்களுக்கு தேவையான இந்த தீம்களை தருகிறது. சில இடங்களில் இம்ப்ளிமெண்ட்கள் மட்டுமே நடந்தேறி வருகிறது. ஆனால் முழுமையான டார்க் மோட்கள் இன்னும் வாட்ஸ்ஆப்பில் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஐ.ஓ.எஸில் 3-ல் இரண்டு கான்ஃபிகரேசன்கள் மட்டுமே வேலை செய்கிறது.
மேலும் படிக்க : இஸ்ரேல் ஸ்பைவேர் என்எஸ்ஓ மீது வாட்ஸ்அப் வழக்கு – தாக்குதல் நடந்தது எப்படி