வாட்ஸ்அப் வெப் மல்டி டிவைஸ் அம்சம்: பயன்படுத்துவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Whatsapp web multi device feature Tamil News வாட்ஸ்அப் வெப்பின் பல சாதன அம்சம் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் சிறப்பாக செயல்படுகிறது.

Whatsapp web multi device feature Tamil News
Whatsapp web multi device feature Tamil News

Whatsapp web multi device feature Tamil News : வாட்ஸ்அப் வெப் சமீபத்தில் அனைத்து பயனர்களுக்கும் பல சாதன பீட்டா அம்சத்தைச் சேர்த்தது. கூடுதலாக, வாட்ஸ்அப்பை இப்போது பிரதான தொலைபேசி பயன்பாட்டில் இல்லாமல் வாட்ஸ்அப் வெப் வழியாக ப்ரவுசர்களில் பயன்படுத்தலாம்.

அதாவது, தொலைபேசியில் இணைப்பு இல்லாவிட்டாலும், வெப் கிளையண்டைப் பயன்படுத்துவது போன்ற சில புதிய செயல்பாடுகள் வாட்ஸ்அப் இணைய பயனர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், முக்கிய வரம்புகள் உட்பட புதிய அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அந்த ஐந்து குறிப்புகள் இங்கே.

பிரதான சாதனத்தில் இணைப்பு தேவையில்லை

வாட்ஸ்அப் வெப் மல்டி-டிவைஸ் அம்சம், உங்கள் பிரதான ஃபோனுடன் இணைப்பு இல்லாமல் மற்ற நான்கு சாதனங்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. அதாவது, உங்கள் ஃபோன் இணைப்பை இழந்தாலும், ஷட் டவுன் செய்யப்பட்டாலும் அல்லது வேறு சில காரணங்களுக்காக வாட்ஸ்அப்புடன் இணைக்க முடியாவிட்டாலும், நீங்கள் இப்போது வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தலாம்.

நான்கு சாதனங்கள் வரை இணைக்கலாம்

வாட்ஸ்அப் வெப்பின் மல்டி டிவைஸ் அம்சம் மேலும் நான்கு சாதனங்களை இணைக்க உங்களை அனுமதிக்கும். இருப்பினும், ஒரே சாதனத்தில் பல ப்ரவுசர்களை இணைத்தால், அவை பல உள்ளீடுகளாகக் கணக்கிடப்படும். அதாவது ஒரு லேப்டாப்பில் நான்கு வெவ்வேறு பிரவுசர் வழியாக வாட்ஸ்அப் வெப்பை இணைத்தால், நீங்கள் ஏற்கனவே வரம்பைக் கடந்துவிட்டீர்கள். மேலும் மற்றொரு சாதனம் அல்லது பிரவுசரை சேர்க்க முடியாது.

ஆண்டிராய்டு மற்றும் iOS வேறுபாடு

மல்டி-டிவைஸ் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்தாலும், இந்த செயல்பாடுகள் சற்று வித்தியாசமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைப்பது, இணைய போர்ட்டலில் இருந்து செய்திகள் மற்றும் த்ரெட்களை நீக்க உங்களை அனுமதிக்கிறது. ஆனால், iOS சாதனத்தில் நீங்கள் அதைச் செய்ய முடியாது.

அழைப்புகள் ஆதரிக்கப்படாது

வாட்ஸ்அப் அழைப்புகள், வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள், இன்னும் பல சாதன அம்சத்தால் ஆதரிக்கப்படவில்லை மற்றும் பிரதான சாதனத்திலிருந்து மட்டுமே செய்ய முடியும் அல்லது எடுக்க முடியும்.

இன்னும் பீட்டா அம்சம் உள்ளது

வாட்ஸ்அப் வெப்பின் பல சாதன அம்சம் இன்னும் பீட்டாவில் உள்ளது. அவற்றில் மேலும் சில பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருக்கலாம். பிரவுசர்கள் வழியாக டேப்லெட்டுகள் மற்றும் பிற ஃபோன்களுக்கான ஆதரவும் இதில் அடங்கும். இப்போதைக்கு, வாட்ஸ்அப் வெப்பின் பல சாதன அம்சம் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் சிறப்பாக செயல்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp web multi device feature tamil news

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com