வாட்ஸ்அப் பயனாளர்களே… உங்களை அசத்த வரும் 5 புதிய அம்சங்கள்

Whatsapp : வாட்ஸ் ஆப் Stories மற்றும் Status கள் போல இனி விரைவில் send messages களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தானாக மறைந்து போகும்.

whatsapp, whatsapp new features, multi-device support, In-app browser, new whatsapp features, upcoming whatsapp features, whatsapp, whatsapp upcoming features, whatsapp new features, whatsapp functionalities, whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil
whatsapp, whatsapp new features, multi-device support, In-app browser, new whatsapp features, upcoming whatsapp features, whatsapp, whatsapp upcoming features, whatsapp new features, whatsapp functionalities, whatsapp news, whatsapp news in tamil, whatsapp latest news, whatsapp latest news in tamil

WhatsApp New Features: உலகம் முழுவது 2 பில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் உலகளவில் மிகப் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். இந்த தளம் தொடர்ந்து பல புதிய அமசங்கள் மற்றும் புதுப்பிப்புகளுடன் வருகிறது, இது செய்தியிடல் அனுபவத்தை சிறந்ததாக்குகிறது. சமீபத்தில் வாட்ஸ் ஆப் Dark Mode ஐ அறிமுகப்படுத்தியது, group voice மற்றும் video call ல் பங்குபெறுபவர்களின் வரம்பை 4 லிருந்து 8 ஆக அதிகரித்தது, அடிக்கடி பார்வர்ட் செய்யப்படும் மெசேஜ்களை ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டைகளுக்கு (chat) ஒரே நேரத்தில் அனுப்புவதை தடைசெய்தது.

வாட்ஸ் ஆப் பல புதிய அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்த வேலை செய்துவருகிறது, அதிலுள்ள 5 வரவிருக்கும் அம்சங்களைக் குறித்துப் பார்ப்போம்.

Multiple device support

வாட்ஸ் ஆப் பல சாதன ஆதரவை (multiple device support) பல மாதங்களாக சோதித்து வருகிறது. இயக்கப்பட்டதும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் உள்நுழைய இந்த அம்சம் அனுமதிக்கும். தற்போது பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் ஒரே ஒரு சாதனத்தில் மட்டும்தான் உள்நுழைய முடியும். அதே கணக்கு மற்றொரு சாதனத்தில் உள்நுழைந்ததும் (logged into), அது தானாகவே முதல் சாதனத்திலிருந்து வெளியேறி (logs out) விடும்.

WhatsApp QR code

ஒரு QR குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்வதன் மூலம் புதிய தொடர்புகளைச் சேர்க்க உங்களை அனுமதிக்கும் புதிய அம்சம் குறித்து வாட்ஸ் ஆப் வேலை செய்துவருகிறது. பயனர்கள் தங்களது சொந்த தொடர்பு QR குறியீட்டை காண்பிப்பதோடு, மற்றவர்களின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் தொடர்புகளில் சேர்க்கவும் முடியும். இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இயங்குதளங்களின் beta பதிப்புகளில் கிடைக்கிறது, மேலும் நிலையான பதிப்புகளுக்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Self-destructing messages

இது நீண்ட காலமாக வேலைகளில் இருக்கும் மற்றொரு அம்சமாகும். 24 மணி நேரத்துக்கு பிறகு தானாக மறையும் வாட்ஸ் ஆப் Stories மற்றும் Status கள் போல இனி விரைவில் send messages களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு தானாக மறைந்து போகும். சுய ஆழிப்பு (self-destructing) அல்லது மறையும் அம்சத்துக்கு Delete Messages என மறுபெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது நிலையான பதிப்புகளுக்கு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

In-app browser

அரட்டைகள் (chats) வழியாக அனுப்பப்படும் இணைப்புகளை (links) திறக்கும் போது அது web browser க்கு redirect செய்யப்படுவதை தவிர்த்து, செய்தியிடல் தளத்தின் உள்ளேயே பயனர்கள் அதை திறக்க அனுமதிக்கும் in-app browser அம்சத்தை கொண்டு வர வாட்ஸ் ஆப் வேலை செய்து வருகிறது. இந்த in-app browser அம்சம் இணைப்புகளை திறப்பதற்கு ஆகும் நேரத்தை குறைக்கிறது. Twitter மற்றும் LinkedIn உட்பட பல ஆப்களில் இந்த அம்சம் உள்ளது அதன் வழியிலேயே இதுவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last seen for select friends

வாட்ஸ்அப் தற்போது பயனர்கள் கடைசியாக பார்த்த நிலையை (status) தொடர்புகளுடன் (contacts), எல்லோருடனும் (everyone) அல்லது யாருடனும் இல்லை (no one), என்று மூன்று விதங்களில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. தற்போதைய நிலையில் உங்களுடைய கடைசியாக பார்த்த நிலையை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துக் கொள்ள முடியாது. ஆனால் அதை செய்யக்கூடிய ஒரு அம்சம் குறித்து வாட்ஸ் ஆப் வேலை செய்துவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp whatsapp new features multi device support in app browser new whatsapp features

Next Story
இது போன்ற ஆபத்தான நேரத்தில் உதவும் நண்பன்: ‘கூகுள் மேப்’ வெறும் விளையாட்டு அல்ல!Google, Google Maps, COVID 19, Google Maps COVID-19 features, Google Maps new update, கூகுள் மேப், கொரோனா வைரஸ், Google Maps COVID-19 update, Google Maps coronavirus features
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com