ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சட்டத்திற்கு இணங்க வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, மூன்றாம் தரப்பு ஷேட் ஆப்ஷன் சோதனையைத் தொடங்கியுள்ளது. இது தொடங்கப்பட்டால் வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற செயலிகளையும் எளிதாக பயன்படுத்த அனுமதிக்கும்.
WABetaInfo படி, ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.19.8-ல் இந்த அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
WhatsApp மற்றும் Facebook Messenger ஆகியவை ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான இரண்டு சமூக ஊடக செயலியாகும். அவை பயன்படுத்த எளிதாக இருப்பதும் மற்றும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனுடன் மேம்பட்ட பாதுகாப்பிற்காகவும் அறியப்படுகின்றன. எனினும் இன்டர்-ஓபரேபிலிட்டி குறிப்பிடத்தக்க என்கிரிப்ஷனை உடைக்க வாய்ப்புள்ளது.
வாட்ஸ்அப்பைத் தவிர, மெட்டா அதன் பேஸ்புக் மெசஞ்சரிலும்ross-platform messaging இயக்குவதற்கு இணக்கமாக உள்ளது.
EU இன் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) சமீபத்தில் ஆல்பாபெட், அமேசான், மெட்டா, பைட் டான்ஸ், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை "கேட் கீப்பர்கள்" என்று பெயரிட்டுள்ளது, அவை இப்போது ஏப்ரல் 2024 க்குள் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அத்தகைய தேவைகளில் ஒன்று மூன்றாம்- தரப்பு மெசேஜ் இயக்கத்துடன் இயங்குவதை செயல்படுத்துவதாகும். ‘
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் கூகுள் மற்றும் ஆப்பிள் டூபோலியை உடைக்க DMA உடன் இணங்க, தங்கள் சொந்த ஆப் ஸ்டோர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“