வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் அப்டேட் கொண்டு வந்துள்ளது.
WABetaInfo இன் கூற்றுப்படி, வாட்ஸ்அப் தற்போது புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதில், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்யும் ஸ்டேட்டஸை நேரடியாக தங்கள் பேஸ்புக் கணக்கிலும் அப்லோடு ஆகும் படி புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது இரு தளங்களிலும் பகிர்வதை எளிதாக்குகிறது. அதாவது இந்த அம்சம் ஒரு ஆப்ஷன் எனேபில் செய்யும் வகையில் மாற்றப்படுகிறது. வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறாமல் இதை செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தனித் தனியாக ஸ்டேட்டஸ் அப்லோடு செய்வதை இது தவிர்க்கிறது. தற்போது இந்த ஆப்ஷன் இன்ஸ்டாகிராமிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் தளத்திலும் நேரடியாக அப்லோடு செய்யும்படி ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது,
இந்த புதிய அம்சம், வாட்ஸ்அப்பின் செட்டிங்க்ஸ் ஆப்ஷனில் Status Privacy பக்கத்தில் இடம் பெற உள்ளது. இங்கு சென்று பயனர் தங்கள் பேஸ்புக் கணக்கை இணைத்து நேரடியாக ஸ்டேட்டஸ் ஷேர் செய்யலாம்.