வாட்ஸ்ஆப் செயலியில் இனி ஒரு செய்தியை 5 முறைக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது. வதந்திகள் வேகமாக பரவுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று வாட்ஸ்ஆப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியினை பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் செய்திகளை அதிக அளவில் ஃபார்வர்ட் செய்கின்றார்கள் மக்கள்.
மேலும் இப்படியாக ஃபார்வர்ட் செய்யப்படும் செய்திகளினால் வதந்திகள் உருவாகி கொலைவெறித் தாக்குதல்கள், மற்றும் வன்முறைகள் ஆகியவற்றிற்கு வழி வகுக்கிறது.
இதனை தடுக்கச் சொல்லி, இந்திய அரசு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குழுமத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். ஃபார்வர்ட் செய்திகள் அனுப்பப்படும் போது, அது லேபிளுடன் செல்வதற்கான வழிமுறையை முன்பு அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப்.
தற்போது வாட்ஸ்ஆப் செயலி மூலமாக ஐந்து பேருக்கு மட்டுமே ஒரு செய்தியினை ஃபார்வர்ட் செய்ய இயலும். ஐந்து முறை அந்த செய்தி ஃபார்வர்ட் செய்யப்பட்ட பின்னர், ஃபார்வர்ட் என்ற ஆப்சன் மறைந்துவிடும்.
ஆனால் ஒரு செய்தியினை காப்பி செய்து அனுப்புவதை எப்படி தடுப்பது போன்ற கோணத்திலும் யோசித்து செயல்பட்டு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.