ஒரு க்ளிக்.. ஒரு ஸ்கேன்: டாக்குமெண்ட் ஸ்கேன் ஆப் தேடாதீங்க! வாட்ஸ்அப் நியூ அப்டேட்!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், ஆவண ஸ்கேனிங் அம்சத்தை (Document Scanning Feature) அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் தனியாக ஸ்கேனர் செயலிகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், ஆவண ஸ்கேனிங் அம்சத்தை (Document Scanning Feature) அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் தனியாக ஸ்கேனர் செயலிகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Scan Documents

ஒரு க்ளிக்... ஒரு ஸ்கேன்: ஸ்கேன் செய்ய ஆப் தேடாதீங்க! வாட்ஸ்அப் நியூ அப்டேட்!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், ஆவண ஸ்கேனிங் அம்சத்தை (Document Scanning Feature) அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் தனியாக ஸ்கேனர் செயலிகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக வாட்ஸ்அப்பிலேயே ஆவணங்களை ஸ்கேன் செய்து பி.டி.எஃப். (PDF) கோப்புகளாக அனுப்ப முடியும்.

Advertisment

இதுவரை ஆவணங்களை ஸ்கேன் செய்ய தனியாக ஸ்கேனர் ஆப் (அ) கூகுள் டிரைவ் போன்ற பிற சேவைகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால், WhatsApp தனது செயலியிலேயே இந்த வசதியை கொண்டுவருவதால், பயனர்கள் நேரடியாக ஒரு சாட்டில் இருந்தபடியே ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF ஆக அனுப்ப முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆவணப் பரிமாற்றத்தையும் மேலும் எளிதாக்கும்.

எப்படி இயங்கும் இந்த வசதி?

இந்த புதிய வசதி, ஒரு சாட்டில் உள்ள அட்டாச்மென்ட் (Attachment) மெனுவில் "Scan Document" என்ற புதிய விருப்பத்தின் மூலம் செயல்படும். இதை தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா திறக்கும். ஆவணத்தின் ஓரங்களை தானாகவே கண்டறிந்து படம்பிடிக்கும் திறன் இதில் உள்ளது. ஸ்கேன் செய்த பிறகு, பயனர்கள் தேவைக்கேற்ப ஆவணங்களை கிராப் (Crop) செய்யலாம், Rotate, (Adjust brightness), மேலும் கருப்பு-வெள்ளை (Black & White) அல்லது Greyscale போன்ற ஃபில்டர்களைப் பயன்படுத்தி மேம்படுத்தலாம். பல பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் ஒரே பி.டி.எஃப் கோப்பாக ஸ்கேன் செய்து அனுப்ப முடியும் என்பது இந்த அம்சத்தின் கூடுதல் பலம். அலுவலகப் பணிகளுக்கும், மாணவர்கள் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் நேரடியாக உங்கள் போனிலே செயலாக்கப்படும். அவை எந்த வெளி சர்வர்களுக்கும் அனுப்பப்படாது. மேலும், வாட்ஸ்அப்பின் அனைத்து செய்திகளைப் போலவே, இந்த ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) மூலம் பாதுகாக்கப்படும். இதனால் அனுப்பியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அந்தக் கோப்பைப் பார்க்க முடியும்.

Advertisment
Advertisements

இந்த ஆவண ஸ்கேனிங் அம்சம் ஐபோன் பயனர்களுக்கு ஏற்கனவே டிசம்பர் 2024 முதல் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தற்போது பீட்டா வெர்ஷனில் (2.25.18.29 மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன்கள்) சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த அம்சம் வெளியிடப்படும் என வாட்ஸ்அப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அம்சம் WhatsApp-ஐ தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கு மேலும் வலுவான தளமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Whatsapp Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: