Whatsapp will soon allow you to convert images into stickers Tamil News : வாட்ஸ்அப் ஏற்கனவே iOS மற்றும் Android பயனர்களுக்கு நிறைய அம்சங்களை வழங்குகிறது. இப்போது, பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த நிறுவனம் டெஸ்க்டாப் பதிப்பிலும் புதிய மற்றும் தனித்துவமான அம்சங்களைச் சேர்க்கும் வேலையில் இருப்பதாகத் தெரிகிறது. WaBetaInfo செய்தி, இந்த செயலி விரைவில் ஒரு அம்சத்தை வெளியிடும் என்று அறிவித்தது. இது பயனர்கள் தங்கள் படங்களை ஸ்டிக்கர்களாக மாற்ற அனுமதிக்கும்.
இது எப்படி வேலை செய்கிறது?
பயன்பாட்டில் ஒரு புதிய படத்தைப் பதிவேற்றும்போது பயனர்கள் தலைப்பு பட்டியின் அருகில் ஒரு புதிய ஸ்டிக்கர் ஐகானைக் கவனிப்பார்கள். நீங்கள் அந்த ஐகானைத் தேர்ந்தெடுக்கும்போது, வாட்ஸ்அப் அந்தப் படத்தை வழக்கமான படமாக அல்லாமல் ஸ்டிக்கராக அனுப்பும்.
அறிக்கையின் படி, நீங்கள் அனுப்பிய படம் ஸ்டிக்கரா இல்லையா என்பதைப் பயனர்கள் சரிபார்க்க முடியும். இந்த அம்சம் தற்போது வளர்ச்சியில் உள்ளது மற்றும் வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும். தற்போது, இந்த அம்சம் 2.2137.3 டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது.
"இந்த அம்சம் மிகவும் பயனுள்ளது மற்றும் எந்தவொரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பயன்படுத்தாமல், உங்கள் படத்தை ஸ்ட்டிக்காராக மாற்ற முடியும். தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இந்த அம்சம் வேலை செய்யவில்லை” என்று WaBetaInfo கூறுகிறது.
தவிர, கடந்த மாதம், வாட்ஸ்அப் பீட்டா திட்டத்தை வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிற்காக அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் புதிய அம்சங்களை சோதிக்க அனுமதிக்கிறது. பீட்டா பதிப்பு விண்டோஸ் மற்றும் macOS பயனர்களுக்குக் கிடைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil