மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் கால் அம்சத்தில் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நண்பர்கள், உறவினர்களுடன் பேச முன்பே குறிப்பிட்ட நேரத்தை schedule செய்து வைத்து அனைவரையும் ஒரு சேர தொடர்பு கொண்டு பேசலாம். அதாவது schedule group calls என்று சொல்லப்படுகிறது. WABetaInfoவின் கூற்றுப்படி தற்போது இந்த வசதி சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. schedule group calls என்று புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் கால் பட்டன் கிளிக் செய்யும் போது ‘Schedule Call’ பட்டன் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சென்று எப்போது குரூப் கால் தொடங்க வேண்டும், யார் எல்லாம் குரூப் காலில் இருக்க வேண்டும் என்று செலக்ட் செய்து கொள்ளலாம். கூடுதல் அம்சமாக குரூப் காலிற்கு பெயர் வைத்துக் கொள்ளும் படி அப்டேட் வர உள்ளது. சோதனையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.