Advertisment

இனி இப்படியும் ப்ரொபைல் படம் வைக்கலாம்; வாட்ஸ்அப்-ல் வந்தது புதிய ஏ.ஐ

வாட்ஸ்அப் புதிய ஏ.ஐ மூலம் படங்கள் உருவாக்கி அதை ப்ரொபைல் போட்டோவை வைக்கும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
WAP.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்அப்பில் ஏ.ஐ மூலம் படங்கள் உருவாக்கி அதை ப்ரொபைல் போட்டோவை வைக்கும் வகையில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இது தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisment

ப்ரைவசி-ஐ அதிகப்படுத்தும் வகையிலும், தங்கள் படங்களை ப்ரொபைல் போட்டோவாக வைக்க விரும்பாதவர்களுக்கு இந்த அம்சம் உதவியாக இருக்கும். ப்ரொபைல் படம் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று பென்சில் லைக் எடிட் டேப் பயன்படுத்தி இதை உருவாக்கலாம். 

ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் படங்கள் கிட்டத்தட்ட ஸ்டிக்கர்ஸ் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை உருவாக்க உங்களுக்கு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை describe செய்து உருவாக்கும் வகையில் புதிய ஏ.ஐ அம்சம் கொண்டு வரப்படுகிறது.

இது தற்போது பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment