வாட்ஸ்அப்பில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த முக்கிய அம்சம் வரப்போகிறது!

Whatsapp will soon let you hide last seen for a specific contact Tamil News இந்த அம்சம் முதலில் iOS பயனர்களுக்கும் பின்னர் ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கும்

Whatsapp will soon let you hide last seen for a specific contact Tamil News
Whatsapp will soon let you hide last seen for a specific contact Tamil News

Whatsapp will soon let you hide last seen for a specific contact Tamil News : ஒரு குறிப்பிட்ட தொடர்புக்கு மட்டும், கடைசியாகப் பார்த்ததை (Last Seen) மறைக்கும் திறனை வாட்ஸ்அப் விரைவில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி சேவை தனியுரிமை அமைப்புகளில் “எனது தொடர்புகள் தவிர” விருப்பத்தைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இது குறிப்பிட்ட தொடர்புகளுக்கு மட்டுமே நீங்கள் கடைசியாகப் பார்த்த நேரத்தைக் காணப் பயனர்களை அனுமதிக்கும்.

நீங்கள் வாட்ஸ்அப்பில் கடைசியாக ஆன்லைனில் இருந்த நேரத்தை சிலருக்குக் காட்ட விரும்பாத சூழ்நிலை நிச்சயம் இருக்கும். அப்படி யோசிப்பவர்களுக்கு இது மிகவும் தேவையான அம்சம். நீங்கள் கடைசியாக வாட்ஸ்அப் பார்த்த நேரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாவிட்டால், மற்றவர்களின் கடைசியாகப் பார்த்த நேரத்தையும் உங்களால் பார்க்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

WaBetaInfo, இந்த புதிய அம்சத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. மேலும், இது iOS மற்றும் ஆண்டிராய்டு இரண்டிற்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதே விருப்பம், “சுயவிவரப் புகைப்படம்” மற்றும் “அறிமுகம்” ஆகியவற்றுக்கும் கிடைக்கும். தற்போது, வாட்ஸ்அப் லாஸ்ட் சீன், ப்ரொஃபைல் புகைப்படம் மற்றும் அறிமுகம் ஆகிய மூன்று தனியுரிமை விருப்பங்களை வழங்குகிறது.

இதற்கான மூன்று விருப்பங்கள், “அனைவரும்,” “எனது தொடர்புகள்” மற்றும் “யாரும் இல்லை” ஆகியவை அடங்கும். “எனது தொடர்புகள் தவிர” என்ற மற்றொரு விருப்பத்தை நீங்கள் விரைவில் காண்பீர்கள். இந்த தனியுரிமை விருப்பங்கள் மூலம், நீங்கள் கடைசியாகப் பார்த்த அல்லது சுயவிவரப் படம் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை வாட்ஸ்அப்பில் யார் பார்க்க முடியும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

வாட்ஸ்அப்பில் எந்த தனியுரிமை அமைப்பும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்க முடியாது. வாட்ஸ்அப் உங்கள் நீல நிற டிக்கை மறைத்து, சாட்டில் கடைசியாகப் பார்த்ததை மட்டுமே அனுமதிக்கிறது. வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை அம்சம் அதன் சமீபத்திய iOS பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த அம்சம் முதலில் iOS பயனர்களுக்கும் பின்னர் ஆண்ட்ராய்டுக்கும் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறது.

அறிக்கையின்படி, “எனது தொடர்புகள் தவிர” அம்சம் தற்போது அனைவருக்கும் கிடைக்காது மற்றும் பீட்டா சோதனையாளர்கள் எதிர்கால புதுப்பிப்பில் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Whatsapp will soon let you hide last seen for a specific contact tamil news

Next Story
ரூ.100 விலையில் ரீசார்ஜ் சலுகைகளை நீக்கியது ரிலையன்ஸ் ஜியோ.. காரணம் என்ன?Reliance Jio discontinues two prepaid plans under Rs 100 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com