Whatsapp update: வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தீர்க்கும் முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. வாட்ஸ்அப்பை அலுவல் பணி ரீதியாகவும், தனிப்பட்ட வேலைக்காகவும் பயன்படுத்துவதால், ஏரளாமான குரூப்பில் நாம் இடம்பெற்றிருப்போம். ஆனால், சில குரூப்களில் வரும் மெசேஜ்கள் நமக்கு கடுப்பாக இருக்கிறது என வெளியேறினால் ஈஸியாக மாட்டிக்கொள்வோம். leave Group கொடுத்ததும், குரூப் சாட்டில் அவர் வெளியேறிவிட்டார் என்கிற மெசேஜ் அனைவரும் பார்க்கும் வகையில் தோன்றும். இது சில சமயங்களில் சங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளியேறாமல் இருப்போம்.
Advertisment
தற்போது, இப்பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. WABetaInfo தகவலின்படி, புதிய வசதி சோதனையில் இருப்பதாகவும், புதிய அப்டேட்டில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்டில், நீங்கள் குரூப்பை விட்டு வெளியேறினால், குரூப் அட்மின்களுக்கு மட்டுமே நோட்டிஃபிகேஷன் செல்லக்கூடும். மற்றவர்களுக்கு அலர்ட் செல்லாது.
இந்த வசதி, தற்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா அம்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கான ஆண்ட்ராய்டு பீட்டா அம்சத்திற்கும், பின்னர் படிப்படியாக நிலையான பதிப்புகளுக்கும் வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டேட்டஸில் ரிச் லிங்க் ப்ரிவியூ அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.முன்பு, லிங்க் மட்டுமே ஸ்டேட்டஸில் தெரிந்துவந்த நிலையில், தற்போது அதிலிருக்கு மெட்டாவும் தோன்றும்.
இந்த ஸ்கீரின்ஷாட், வாட்ஸஅப் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் எடுக்கப்பட்டது. முன்பு இருந்ததும், தற்போதைய அப்டேட் வசதியும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் லிங்க்-ஐ கிளிக் செய்து பார்ப்பதற்கு பதில், அந்த லிங்கில் இடம்பெறும் தகவல் குறித்த குறிப்பை ஸ்டோரிலே பார்த்துவிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil