/tamil-ie/media/media_files/uploads/2021/04/whatsapp-12-1.jpg)
Whatsapp will soon make it easier to shift between ios and android
Whatsapp will soon make it easier to shift between IOS and Android : எதிர்காலத்தில் ஆண்டிராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கிடையில் சாட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதை வாட்ஸ்அப் எளிதாக்கும். இது, இரண்டு தளங்களுக்கிடையில் மாறுவதற்கான செயல்முறையை மிகவும் எளிதாகவும் மென்மையாகவும் செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு iOS பயனராக இருந்து ஆண்டிராய்டு சாதனத்திற்கு மாற முடிவு செய்தால், வாட்ஸ்அப்பின் கொள்கைக்கு எதிரான மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் சாட் வரலாற்றை ஏற்றுமதி செய்து இறக்குமதி செய்ய முடியாது.
நீங்கள் தற்போது iOS சாதனங்களிலிருந்து ஆண்டிராய்டு சாதனங்களுக்கு மாறும்போது, உங்கள் புகைப்படம், பெயர், தகவல்கள், தனிப்பட்ட சாட்கள், குழு அரட்டைகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய உங்கள் கணக்கு தகவலை வாட்ஸ்அப் மாற்றுகிறது. ஆனால், இது உங்கள் சாட் வரலாற்றை மாற்றாது.
IOS பயனர்கள் தங்கள் சாட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டிராய்டுக்கான பீட்டாவின் சமீபத்திய பதிப்பானது, WABetaInfo-ன் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் புதிய சாட் இறக்குமதி அம்சத்தை உள்ளடக்கியுள்ளது.
இந்த அம்சம் iOS பயனர்கள் தங்கள் சாட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும். ஒருவேளை வெளிப்புற ஃபைலாக இருக்கலாம். பின்னர் ஃபைல்களை ஆண்டிராய்டு சாதனங்களில் ஏற்றலாம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இறக்குமதி செய்யலாம். வாட்ஸ்அப்பின் பல சாதன அம்சம் வெளியானதும் இந்த அம்சம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
வாட்ஸ்அப்பில் செயல்படுவதாகக் கூறப்படும் பல சாதன அம்சம் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பிசிக்கு கூடுதலாக ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்த அம்சம் எப்போது வெளியிடப்படலாம் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.