உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய அப்டேட்களை வெளியீட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சத்தை எளிதாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இந்த மாற்றம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய அம்சத்தின் படி, வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்கையில், திரையில் Pause பட்டன் தோன்றும். லாங் வாய்ஸ் மெசேஜ் பேசுகையில், திடீரென ஏதெனும் இடையூறு வந்தால், வாய்ஸ் மெசேஜை பாஸ் செய்து, மீண்டும் Record செய்யலாம். முன்பு, மொத்த வாய்ஸ் ரெக்கார்டிங்கையும் டெலிட் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது.

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.6.7 இல் Pause பட்டன் வருகிறது. இந்த பட்டன் முன்பு Stop பட்டன் இருந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அந்த ஸ்டாப் பட்டன் பெரிதும் உபயோகமாகவில்லை.
பயனர்கள் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்கையில் அதனை லாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம், நீண்ட நேரம் பட்டனை ட்ச் செய்தே வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனுக்கு அறிமுகமாகியுள்ளது. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்ப்படும். இந்த வசதி ஏற்கனவே ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil