வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய அப்டேட்டில் போட்டோ, வீடியோ உள்ளிட்ட ஃபைல்களும் தானாகவே டெலிட் ஆகிவிடும் அம்சத்தை சோதனை செய்துவருகிறது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வரவுள்ளது.
Advertisment
புதிய அப்டேட்டில், வாட்ஸ்அப் தானாகவே Disappearing சாட்டில் மீடியை பைல்களை சேகரிக்கும் வசதியை ஆஃப் செய்துவிடும். இந்த புதிய வசதி, Disappearing சாட்டில் வந்த இமெஜ், வீடியோ, ஆகியவை மொபைல் கேலரியில் செவ் ஆகுவதை தடுக்கிறது. உங்களுக்கு மீடியா பைல் வேண்டுமென்றால், நீங்களா Settingக்கு சென்று ஆன் செய்துகொள்ளலாம்.
இந்த புதிய அம்சம், Disappearing சாட்டில் வரும் மெசேஜ்,வீடியோக்கள் கேலரியில் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். ஏனெனில், பிரைவட் போட்டோ, வீடியோஸ் வர வாய்ப்பிருப்பதால், கேலரியில் செவ் ஆகும் பட்சத்தில், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் பார்க்க வாய்ப்புள்ளது.
பார்வேட் மெசேஜில் கட்டுப்பாடு
வாட்ஸ்அப் நிறுவனம், பார்வேட் மெசேஜ் அனுப்பதிலும் கட்டுப்பாடை விதிக்கும் அம்சத்தை சோதித்து வருகிறது. ஒரு நேரத்தில் ஒரு குரூப்புக்கு மட்டுமே பார்வேட் மெசேஜை அனுப்பும் வகையில் வடிவமைத்துவருகிறது. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குரூப்புக்கு அனுப்ப முயற்சித்தால், Forwarded messages can only be sent to one group chat,” என்பது திரையில் தோன்றக்கூடும். இந்த புதிய அம்சம் குறித்து அறிவிப்பானது, வாய்ஸ் மெசேஜ் பல புதுமைகளை வாட்ஸ்அப் புகுத்திய பிறகு வந்துள்ளது. சமீப நாள்களாக, பயனர்களைின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil